Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு புதிய கேப்டன்.. பும்ரா அணிக்கு திரும்பினார்..அயர்லாந்து தொடருக்கான வீரர்கள் அறிவிப்பு

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் நட்சத்திர வீரர் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆசிய கோப்பை தொடங்கும் முன்பு இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அயர்லாந்துக்கு சென்று விளையாடி இருக்கிறது.

இதில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. t20 தொடரில் எப்போதும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படும் நிலையில் தற்போது புதிய கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டிருக்கிறார்.பும்ரா அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது உடல் தகுதியை எட்டி விட்டார். இதன் காரணமாக அவர் அணிக்கு திரும்பி இருக்கிறார். சிஎஸ்கே வீரர் ருத்ராஜ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

jasprit bumrah named indian team captain for ireland t20 series

இதேபோன்று சிஎஸ்கே அணியின் சிவம் துபேவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஜெய் ஸ்வால், திலக் வர்மா, அதிரடி வீரர் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா ஆகியோரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். சுழற் பந்துவீச்சாளராக வாஷிங்டன் சுந்தர்,சேஷாஸ் அகமத், ரவி பிஷ்னாய் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

வேகப்பந்துவீச்சாளர்களாக பிரசித் கிருஷ்ணா ,ஆர்ஸ்தீப் சிங், பும்ரா ஆகியோர் உள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் இந்த தொடரில் வாய்ப்பு வழங்க வேண்டும் என பிசிசிஐ தேர்வுக் குழுவில் ஆலோசிக்கப்பட்டது. எனினும் இந்திய அணிக்கு திரும்பியுள்ள பும்ரா தான் இந்த தொடரில் கேப்டனாக செயல்பட விருப்பம் தெரிவித்தார். இதன் காரணமாகவே அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

முதல் டி20 போட்டி வரும் 18ஆம் தேதியும் இரண்டாவது டி20 வரும் 20ஆம் தேதியும் மூன்றாவது டி20 வரும் 23ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்தத் தொடர் முடிந்தவுடன் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஆசிய கோப்பைத் தொடர் நடைபெறுகிறது. இந்திய அணி செப்டம்பர் இரண்டாம் தேதி தான் பாகிஸ்தானை தங்களது முதல் லீக் ஆட்டத்தில் எதிர்கொள்கிறது.

Story first published: Monday, July 31, 2023, 20:43 [IST]
Other articles published on Jul 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+