Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னால் முடியவில்லை என பும்ரா சொன்னார்.. அவரை பத்திரமா கையாளனும்.. அஸ்வின் எச்சரிக்கை

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கு பெறும் இந்திய அணி வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் பும்ரா பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பல முன்னாள் வீரர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலை பத்திரமாக கையாள வேண்டும் என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர், பும்ராவின் விஷயத்தில் நாம் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் சரியாக பயன்படுத்தவில்லை என்று நினைக்கின்றேன்.

Jasprit bumrah

ஆஸ்திரேலிய தொடரில் மெல்போர்ன் போட்டியின் போது பும்ரா என்னால் முடியவில்லை எனது உடல் சோர்வாக இருக்கின்றது. உடல் எனக்கு ஒத்துழைக்க மறுக்கிறது என்று கூறினார். அதன் பிறகும் சிட்னி டெஸ்ட் போட்டியில் நாம் விளையாட வைத்தோம். இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

தற்போது பும்ரா மூன்று டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடப் போகிறார் என்று அறிவித்திருக்கிறார்கள். அதிலும் நாம் கவனமாக செயல்பட வேண்டும். மூன்று டெஸ்ட் போதும் என்று சொல்லாமல் எப்போது உங்களுக்கு ஓய்வு தேவை? உங்களால் சரியாக விளையாட முடியுமா என்பதை எல்லாம் நாம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் ஏன் இரண்டு டெஸ்ட் போட்டி விளையாட வைக்கக்கூடாதா? ஏன் 4 போட்டிகள் விளையாட வைக்கக்கூடாதா என்ற கேள்விகள் வரும். இதையெல்லாம் சமாளிக்க வேண்டும் என்றால் நாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். பும்ராவின் உடல் நலம் எவ்வாறு இருக்கின்றது என்பதை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அவருடைய உடல் ஒத்துழைக்கிறதா என்பதை அறிவியல் பூர்வமாக நாம் சோதிக்க வேண்டும். அவர் ஓடும் போது எவ்வளவு வேகத்தில் ஓடுகிறார். இல்லை வேகம் குறைகிறதா, பந்து வீசும் வேகம் குறைகிறதா, அவர் சோர்வாக இருக்கிறாரா என்பதை எல்லாம் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும். முதல் டெஸ்டில் விளையாடிய பிறகு பும்ராவின் உடல் தகுதியை கண்காணித்து அவரிடமே உங்களால் அடுத்த டெஸ்ட் விளையாட முடியுமா இல்லை ஓய்வு வேண்டுமா என்பதை கேட்டு முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்தால் மட்டுமே பும்ராவை நாம் சரியாக பயன்படுத்த முடியும். பும்ரா சிட்னி டெஸ்டில் விளையாட இருந்தால், ஒரு வேலை இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கிறது. இதனால் இங்கிலாந்திலும் இதே சூழல் வந்தால் நாம் பும்ராவை சரியாக கையாள வேண்டும் என்று அஸ்வின் அறிவுறுத்தியுள்ளார்.

Story first published: Friday, June 13, 2025, 22:26 [IST]
Other articles published on Jun 13, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+