Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவால் பிசிசிஐ-க்கு தலைவலி.. 970 நாட்களில் வெறும் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார்!

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு தொடர்ந்து காயங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் அவரது 'பணிச்சுமை மேலாண்மை' குறித்து பெரும் விவாதம் கிளம்பி உள்ளது. கடந்த 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு, கிட்டத்தட்ட 970 நாட்களில் பும்ரா வெறும் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

இப்படி காயத்தாலும், காயம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதாலும் பல போட்டிகளில் ஆடாமல் இருக்கும் ஒரு பந்துவீச்சாளரால் எப்படி அடுத்த உலகக்கோப்பையில் ஆட முடியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2023 நவம்பர் 19 அன்று ஒருநாள் போட்டி உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி நடைபெற்றது. அதன் பிறகு, பும்ரா தனது கடைசி ஒருநாள் போட்டியை கடந்த ஜூலை 16 அன்று இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார். இந்த 970 நாட்களில் இந்திய அணி மொத்தம் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அதில் பும்ரா வெறும் 3 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார்.

Jasprit Bumrah played only 3 ODI matches after 2023 ODI World Cup due to injury management

மீதமுள்ள 26 போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இத்தகைய இக்கட்டான சூழலில், இவரை மட்டுமே நம்பிக் கொண்டு இந்திய அணி எவ்வாறு 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை வெல்லப்போகிறது என்ற நியாயமான கேள்வி எழுந்துள்ளது.

ஒருநாள் போட்டிகள் மட்டுமின்றி, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலும் பும்ராவின் பங்கேற்பு மிகவும் குறைவாகவே உள்ளது. 2023-க்குப் பிறகு இந்தியா விளையாடிய 27 டெஸ்ட் போட்டிகளில், பும்ரா 22 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 5 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதேபோல், டி20 கிரிக்கெட்டில் இந்தியா விளையாடிய 78 போட்டிகளில், வெறும் 33 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடியுள்ளார். மீதமுள்ள 45 போட்டிகளில் பணிச்சுமை மேலாண்மை அல்லது காயம் காரணமாக அவர் விளையாடவே இல்லை.

சிஎஸ்கே-வில் மேலும் பலரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்.. ருதுராஜ் கெய்க்வாட் வந்த உடன் அதிரடி முடிவு

சிஎஸ்கே-வில் மேலும் பலரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்.. ருதுராஜ் கெய்க்வாட் வந்த உடன் அதிரடி முடிவு

சமீபத்தில் இங்கிலாந்து தொடரில் ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக, தற்போதைய இலங்கை டெஸ்ட் தொடரிலிருந்தும் பும்ரா கடைசி நேரத்தில் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஜம்மு காஷ்மீரின் ஆகிப் நபி சேர்க்கப்பட்டுள்ளார். பிசிசிஐ பும்ராவின் உடற்தகுதியைக் காக்க எவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும், அவர் அடிக்கடி காயமடைவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் பிசிசிஐ-யின் இந்த பணிச்சுமை மேலாண்மை முறை என்பது வெறும் கண் துடைப்பா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.

இந்திய அணியில் பாதி பேருக்கு காயம்.. இனியும் சும்மா இருக்க முடியாது.. கம்பீர், கில் அதிருப்தி

இந்திய அணியில் பாதி பேருக்கு காயம்.. இனியும் சும்மா இருக்க முடியாது.. கம்பீர், கில் அதிருப்தி
Story first published: Monday, August 3, 2026, 15:27 [IST]
Other articles published on Aug 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+