For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மறுபடியும் முதல்ல இருந்தா.. இலங்கை தொடரில் இருந்து பும்ரா விலகல்.. போட்ட திட்டம் முழுவதும் க்ளோஸ்!

கவுகாத்தி: இலங்கை அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 தேர்வு பணிகள் நடந்து வரும் சூழலில் கடைசி நேரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு தொடங்கும் என தெரிவித்துள்ளனர்.

டி20 தொடரை ஹர்திக்கின் தலைமையில் இந்தியா கைப்பற்றிய சூழலில் 50 ஓவர் கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையில் வெல்ல வேண்டும் என தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பின்னடைவு

பின்னடைவு

இந்நிலையில் திடீரென இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இலங்கை தொடரில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்தே காயம் காரணமாக விலகியிருந்த அவர் தற்போது தான் அணிக்கு வந்தார். ஆனால் மீண்டும் விளையாடாமல் செல்கிறார்.

காரணம் என்ன

காரணம் என்ன

ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரை காயத்தில் இருந்து அவசரமாக வரசொல்ல வேண்டாம் என்பதற்காக ஓய்வு தரப்பட்டது. அதே காரணத்திற்காக தான் தற்போதும் பெயரை நீக்கியுள்ளனர். பும்ரா முழுமையாக குணமடைந்தாலும், அவர் சற்று ஓய்வுக்கு பின் வரட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சொதப்பிய திட்டம்

சொதப்பிய திட்டம்

இந்த போட்டியில் இந்திய அணி முழு பலத்துடன் களமிறங்குகிறது என்று கூறலாம். ஏனென்றால் காயத்தில் இருந்து வந்த ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பினார். இதே போல ஓய்வில் இருந்த விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களாக அணியில் இடம் பெறாமல் இருந்த பும்ரா, முகமது ஷமி ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்ததால் உலகக்கோப்பைக்கான திட்டம் தொடங்கியது என ரசிகர்கள் கருதினர். இந்த சூழலில் தான் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மாற்று வீரர் யார்

மாற்று வீரர் யார்

அணியில் தற்போது வேகப்பந்துவீச்சுக்கு முகமது ஷமியும் ஹர்திக் பாண்ட்யாவும் இருக்கின்றனர். இவர்களை தவிர்த்து இளம் வீரர்களான அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், முகமது சிராஜ் ஆகியோர் உள்ளனர். இவர்களில் இருந்து யாரேனும் ஒருவர் பும்ராவின் இடத்தை நிரப்பவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 9, 2023, 15:45 [IST]
Other articles published on Jan 9, 2023
English summary
Star pacer Jasprit bumrah ruled out from India vs srilanka ODI series, here is the reason why?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+