Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவின் ருத்ர தாண்டவம்.. சீட்டுக்கட்டாக சரிந்த இங்கிலாந்து.. 111 ரன்கள் மட்டும் இலக்கானது எப்படி?

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அசுரத்தனமான பவுலிங்கை வெளிப்படுத்தியுள்ளது.

Recommended Video

IND vs ENG 1st ODI இந்திய அணி அபார வெற்றி *Cricket

இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

பும்ராவின் புயல்

பும்ராவின் புயல்

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. பும்ரா வீசிய ஓவரிலேயே ஓப்பனிங் வீரர் ஜேசன் ராய் டக் அவுட்டும், ஜானி பேர்ஸ்டோ 7 ரன்களுக்கும் வெளியேறினர். இதன் பின்னர் வந்த இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் ஜோ ரூட்-ம் பும்ராவின் பவுலிங்கில் இருந்து தப்பவில்லை. ஒரு ரன் கூட அடிக்காமல் வெளியேறினார்.

ஷமியின் தாண்டவம்

ஷமியின் தாண்டவம்

ஜஸ்பிரித் பும்ராவின் தாக்கம் முடிவடைவதற்குள் முகமது ஷமியும் ஆட்டம் காட்ட தொடங்கினார். அவர் வீசிய பந்தில் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். அணியை மீட்க போராடிய ஜாஸ் பட்லர் 30 ரன்களை அடித்தார். ஆனால் அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்து உறுதுணையாக யாரும் நிற்கவில்லை.

கடைசி நேர பார்ட்னர்ஷிப்

கடைசி நேர பார்ட்னர்ஷிப்

அதிரடி ஆட்டக்காரர்கள் லியாம் லிவிங்ஸ்டன் டக் அவுட், மொயீன் அலி 14 ரன்கள் என நடையை கட்டினர். 68 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணியை டேவிட் வில்லி மற்றும் ப்ரைடன் கார்ஸ் சற்று காப்பாற்றினர். வில்லி 21 ரன்களும், ப்ரைடன் கார்ஸ் 15 ரன்களும் சேர்க்க 25.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது.

எதிர்பார்க்காத ஸ்விங்

எதிர்பார்க்காத ஸ்விங்

ஓவல் மைதானத்தில் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் சற்று ஸ்விங் இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் நினைத்ததை விட, அதிகப்படியான ஸ்விங் பிட்ச்-ல் ஏற்பட்டது. இதனை சாதூர்யமாக பயன்படுத்திய பும்ரா 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

Story first published: Tuesday, July 12, 2022, 19:59 [IST]
Other articles published on Jul 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+