Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருவழியா தன்னோட கல்யாணத்தை பத்தி அறிவிச்சுருக்காரு பும் பும் பும்ரா... குவியும் வாழ்த்துக்கள்!

கோவா : சஞ்சனா கணேசனுடன் தன்னுடைய திருமணம் குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பும்ரா.

தனது திருமணம் நடந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அழகான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து அவருக்கு சக வீரர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

பும் பும் பும்ரா

பும் பும் பும்ரா

இந்திய அணியின் பௌலர் ஜஸ்பிரீத் பும்ரா குறித்த திருமண யூகங்கள் கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் வெளிவந்தவண்ணம் இருந்தன. இன்றைய தினம் திருமணம் என்பது வரை பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் இருந்தது. இவை குறித்து எந்தவிதமான விளக்கமும் அளிக்காமல் மௌனமாக இருந்தார் பும்ரா.

உறுதிப்படுத்திய பும்ரா

உறுதிப்படுத்திய பும்ரா

இந்நிலையில் தற்போது தனது திருமணம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனா கணேசனுடன் நடந்து முடிந்துள்ளதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இருவரும் இணைந்து புதிய பயணத்தை துவக்கியுள்ளதாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திருமண புகைப்படங்கள்

இன்றைய தினம் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்றும் அவர் உற்சாகத்துடன் குறிப்பிட்டுள்ளார். மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்வதாகவும் இந்த விஷயத்தை அனைவருடனும் பகிர்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தங்களது திருமண புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார். அதில் அழகான திருமண உடையில் இருவரும் மிளிர்ந்தனர்.

மாற்றி பதிவிட்ட மயங்க்

மாற்றி பதிவிட்ட மயங்க்

இதையடுத்து சக இந்திய வீரர்கள், ஹர்திக் பாண்டியா, ஷ்ரேயாஸ் ஐயர், யுவராஜ் சிங் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதனிடையே, பும்ரா மற்றும் சஞ்சனா என்று குறிப்பிடுவதற்கு பதிலாக மயங்க் அகர்வால், முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் பெயரை குறிப்பிட்டு வாழ்த்துக்களை தெரிவித்த கூத்தும் நடந்தேறியது. இதையடுத்து சமூகவலைதளங்களில் அவரை பலரும் கலாய்த்து தள்ளினர்.

Story first published: Monday, March 15, 2021, 19:35 [IST]
Other articles published on Mar 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+