Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சீக்கிரம் வா தலைவா.. உனக்காக தான் நாடே காத்திருக்கு.. பும்ரா தொடர்பாக வந்த சூப்பர் அப்டேட்

பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா எப்போது கிரிக்கெட் விளையாட திரும்புவார் என்பதைத்தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பும்ரா தனி ஆளாகவே நின்று பல கிரிக்கெட் போட்டிகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்திருக்கிறார்.

ஆனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பும்ரா முக்கிய பல போட்டிகளில் விளையாடவில்லை. பும்ரா இல்லாததால் தான் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் பும்ராவுக்கு மீண்டும் காயம் ஏற்பட்டதால் அவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவில்லை.

Jasprit bumrah started to bowl in nets at nca

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் பும்ரா கலந்து கொள்ளவில்லை. பும்ராவுக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் அவருக்கு நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை அடுத்து ஆறு வார காலம் ஓய்வில் இருந்த பும்ரா தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்துள்ளார்.

இதில் நேற்று முதல் பும்ரா உடல் தகுதியை மீட்பதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இதனால் பும்ரா எதிர்பார்த்ததை விட முன்பே கிரிக்கெட் போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அவர் தன்னுடைய பந்துவீச்சில் பழைய பார்மை மீட்டெடுத்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிகளில் விளையாட வாய்ப்பு இருக்கிறது.

அறுவை சிகிச்சை செய்த பிறகு பும்ராவுக்கு வலி ஏற்படவில்லை என்றும் இதனால் அறுவை சிகிச்சை நினைத்தபடியே வெற்றிகரமாக முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இன்னும் அறுவை சிகிச்சை தொடங்கப்படவில்லை. தற்போது அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். அடுத்த வாரம் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Story first published: Saturday, April 15, 2023, 18:11 [IST]
Other articles published on Apr 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+