Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவுக்கு வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை.. மீண்டும் எப்போது திரும்புவார்.. வெளியான அறிக்கை

கிறிஸ்ட்சர்ச் : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நட்சத்திர கிரிக்கெட் வீரர் பும்ரா கடைசியாக இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடினார்.

அதன் பிறகு அவருடைய உடல் தகுதியை கருத்தில் கொண்டு வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா உள்ளிட்ட தொடருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.

மீண்டும் காயம்

மீண்டும் காயம்

இதனை அடுத்து மீண்டும் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அணிக்கு திரும்பிய பும்ரா மீண்டும் காயம் ஏற்பட்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு முக்கிய தொடராக கருதப்பட்ட டி20 உலக கோப்பையில் பும்ரா விளையாடவில்லை. இதனை தொடர்ந்து மீண்டும் ஜனவரி மாதம் இந்திய அணியில் பும்ரா இலங்கைத் தொடருக்கு சேர்க்கப்பட்டார்.ஆனால் அப்போது அவருக்கு முதுகில் மீண்டும் வலி ஏற்பட்டது. இதனை அடுத்து பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவர்கள் பும்ராவை சோதித்தனர்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

அப்போது பும்ராவுக்கு முதுகில் அதிக அழுத்தம் தருவதால் இந்த வலி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் என்பதால் அறுவை சிகிச்சை செய்வதே ஒரே வழி என்று மருத்துவர்கள் கூறினர். இதனை அடுத்து பும்ரா நியூசிலாந்துக்கு சென்றார் . அங்கு உள்ள பிரபல மருத்துவர் டாக்டர் ரோவன் பும்ராவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். இதன் மூலம் பும்ரா கிரிக்கெட் களத்திற்கு திரும்ப அதிகபட்சம் ஆறு மாதங்கள் ஆகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலககோப்பை தொடர்

உலககோப்பை தொடர்

இதன் காரணமாக பும்ரா, ஐபிஎல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தொடர் உள்ளிட்ட எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது ஆகஸ்ட் மாதம் பும்ரா தனது பயிற்சியை தொடங்குவார் என்றும் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை தொடரில் விளையாட பும்ரா குறி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் முதுகு அறுவை சிகிச்சை செய்து உடல் தகுதி பெற நினைத்ததை விட நீண்ட காலம் ஆகும் என்பதால் உலகக் கோப்பை தொடருக்கும் முன்பு பும்ராவை முழு உடல் தகுதியை பெற்று பழைய பார்மை மீட்க பிசிசிஐ நிர்வாகிகள் முடிவெடுத்திருக்கிறார்கள்.

பழைய படி முடியுமா?

பழைய படி முடியுமா?

பும்ரா முதுகில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் அவர் பழையபடி இனி பந்து வீச முடியுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. பும்ராவுக்கு இந்த மருத்துவரின் பெயரை பரிந்துரை செய்தது மும்பை அணியின் பயிற்சியாளர் ஷான் பாண்ட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பும்ராவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ரோவன் ஏற்கனவே ஜேம்ஸ் பேட்டிசன், ஜோப்ரா ஆர்சர், ஜேசன் பேகுரண்டாப் போன்ற பந்து வீச்சாளருக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, March 8, 2023, 13:35 [IST]
Other articles published on Mar 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+