Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவை அணியில் சேர்த்ததால் பிசிசிஐ-க்கு நேர்ந்த தர்மசங்கடம்.. பெங்களூரு அகாடமி மீது புகார்

மும்பை: இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் விலகியதை அடுத்து, பிசிசிஐ-யின் தேர்வுக்குழுவினருக்கே ஒரு வீரர் காயத்தில் இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் தேசிய அகாடமிக்கும் (சிஓஇ), தேர்வுக்குழுவிற்கும் இடையே சரியான தகவல் தொடர்பு இல்லாததே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

பும்ராவுக்கு ஏற்பட்ட காயம் தீவிரமானது என்பதை உணராமல், ஆகஸ்ட் 15 அன்று தொடங்கவுள்ள இலங்கை டெஸ்ட் தொடருக்குள் அவர் உடற்தகுதி பெற்று விடுவார் என்று தேர்வுக்குழுவிடம் சிஓஇ மருத்துவக் குழுவினர் முதலில் நம்ப வைத்துள்ளனர். ஆனால், அவர் இன்னும் குணமாகவில்லை என்பது தெரிந்ததும் தேர்வுக்குழு அதிர்ச்சி அடைந்தது.

Jasprit Bumrah sudden exclusion from test team raises questions Over NCA Bengaluru

இது தொடர்பாக, சிஓஇ தலைவர் விவிஎஸ் லக்ஷ்மண் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் திங்கட்கிழமை அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர். நிதின் படேல் வெளியேறிய பிறகு, சிஓஇ விளையாட்டு அறிவியல் துறைக்கு முறையான தலைவர் இல்லாததே இந்தக் குளறுபடிகளுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தற்போதைய இடைக்காலத் தலைவர் தனஞ்சய் கௌஷிக்கின் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

பும்ரா விவகாரம் மட்டுமின்றி, மற்ற வீரர்களின் உடற்தகுதி குறித்தும் அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஹர்ஷித் ராணா அதிக உடல் எடையுடன் இருந்தபோதும் அவருக்கு உடற்தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது எப்படி? இதனால் தான் அவருக்கு மீண்டும் தொடைப் பகுதி காயம் ஏற்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தருக்குத் தொடர்ந்து தொடைப் பகுதி காயம் ஏற்படுவதை மருத்துவக் குழுவினர் கவனிக்கவில்லையா? அதேபோல, பந்துவீச்சு வேகத்தை அதிகரிக்க நிதிஷ் குமார் ரெட்டி தனியார் பயிற்சியாளர் ஸ்டீபன் ஜோன்ஸிடம் பயிற்சி பெற அனுமதி அளித்தது யார்? இதனால் தான் அவருக்குத் தசைநார் காயம் ஏற்பட்டதா? என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

தற்போது சாய் சுதர்சன் வலைப்பயிற்சியில் 75 நிமிடங்கள் பேட்டிங் செய்கிறார் என்று கூறிவிட்டு, பின்னர் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் அவர் உடற்தகுதி பெறவில்லை என்று கூறி தேர்வுக்குழுவை மீண்டும் தர்மசங்கடத்தில் ஆழ்த்துவார்களோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இந்த தொடர் குளறுபடிகளால், கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியுடன் இருக்கும் பிசியோதெரபிஸ்ட் கமலேஷ் ஜெயினின் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கௌதம் கம்பீர், அஜித் அகர்கர், விவிஎஸ் லக்ஷ்மண் மற்றும் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோர் பங்கேற்கும் உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டத்தில் இந்த விவகாரங்கள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட உள்ளது.

Story first published: Tuesday, August 4, 2026, 9:23 [IST]
Other articles published on Aug 4, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+