Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவுக்கு கல்யாணம்... நல்ல விஷயம்தானே... ஆனா ஏன் இவ்ளோ ஒளிவு மறைவு.. ரசிகர்கள் கேள்வி!

கோவா :இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய பும்ராவிற்கு திருமணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் அவருக்கு கோவாவில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நெருங்கிய உறவினர்களுடன், வெளியாட்கள் 20 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபத்திற்கு மொபைல் போன் எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பும்ராவிற்கு திருமணம்

பும்ராவிற்கு திருமணம்

இந்தியாவின் முன்னணி பௌலரான ஜஸ்பிரீத் பும்ரா கடந்த டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளில் பங்கேற்றுவிட்டு 4வது போட்டியில் விளையாடவில்லை. சொந்த காரணங்களால் அவர் விலகியதாகவும் அடுத்தடுத்த டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் அவர் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்பட்டது. ஆயினும் அவருக்கு திருமணம் என்ற செய்தி வெளியானது.

கோவாவில் இன்று திருமணம்

கோவாவில் இன்று திருமணம்

கோவாவில் 14, 15 தேதிகளில் அவருக்கு திருமணம் என்றும் ஸ்டார் ஸ்போர்ட்சின் தொகுப்பாளர் சஞ்சனா கணேசன்தான் மணமகள் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் இதுகுறித்து பும்ராவோ, சஞ்சனாவோ எதுவும் கூறாத நிலையில் அவர்கள் இருவருக்கும் இன்று கோவாவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

20 பேருக்கு மட்டுமே அழைப்பு

20 பேருக்கு மட்டுமே அழைப்பு

நேற்றைய தினமே திருமணத்தையொட்டி பல்வேறு சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் நடந்து முடிந்துள்ளதாகவும் இதையடுத்து இன்றைய தினம் இருவருக்கும் முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய சொந்தங்கள் மற்றும் 20 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு யூகங்கள்

பல்வேறு யூகங்கள்

மேலும் திருமணத்தில் செல்போன் எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பும்ராவின் திருமணம் குறித்த செய்தி வெளியானதில் இருந்து பல்வேறு யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் இருந்து விலகியுள்ள பும்ரா, அடுத்ததாக ஐபிஎல தொடரில் பங்கேற்று விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.

Story first published: Monday, March 15, 2021, 22:59 [IST]
Other articles published on Mar 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+