For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மேலும் 4 மாதங்கள் ஆகும்.. ஜஸ்பிரித் பும்ரா விஷயத்தில் பிசிசிஐ புதிய முடிவு.. இனி எப்படி சமாளிப்பது?

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் விவகாரத்தில் பிசிசிஐ எடுத்துள்ள புதிய முடிவால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்திய அணியின் மிக முக்கியமான வேகப்பந்துவீச்சாளராக ஜஸ்பிரித் பும்ரா இருந்து வருகிறார். ஆனால் கடந்த ஆசிய கோப்பை முதல் டி20 உலகக்கோப்பை வரை முக்கியமான தொடர்களில் அவரால் விளையாட முடியாமல் உள்ளது.

முதுகுவலி காரணமாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் அவர் தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு திரும்புவார் எனக்கூறப்பட்டு வந்தது. அதற்கேற்றார் போல பயிற்சியையும் அவர் தொடங்கினார்.

 பும்ராவின் காயம்

பும்ராவின் காயம்

எனினும் இந்திய அணி வீரர்கள் பட்டியலில் பும்ராவின் பெயர் மீண்டும் ஒருமுறை இடம்பெறவில்லை. அவரை அவசரப்படுத்த விரும்பவில்லை என விளக்கம் அளித்தனர். இதன் மூலம் ஜஸ்பிரித் பும்ரா நேரடியாக ஐபிஎல் 2023 தொடருக்கு தான் கம்பேக் கொடுப்பார், மும்பை அணியின் ஜெர்ஸியில் அவரை பார்க்கலாம் என தகவல் வெளியாகின. இதற்கு ரசிகர்களும் விமர்சனங்களை அள்ளி வீசினர்.

தீராத பிரச்சினை

தீராத பிரச்சினை

ஆனால் ஐபிஎல் தொடருக்கும் தற்போது ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மை குறையாமலேயே இருப்பதால் ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாடுவது மிகவும் சிரமம் எனத்தெரிவித்துள்ளனர். இதோடு சேர்த்து ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் அவர் விளையாட மாட்டார்.

மேலும் 4 மாதங்கள்

மேலும் 4 மாதங்கள்

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ரா அறுவை சிகிச்சை செய்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதுகுப்பகுதியில் உள்புறத்தில் தீவிரமான பிரச்சினை இருப்பதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் செய்துக்கொண்டால் குறைந்தபட்சம் 4 - 5 மாதங்கள் வரை குணமடைய எடுத்துக்கொள்ளும் எனத்தெரிகிறது.

 வல்லுநர்கள் அறிவுரை

வல்லுநர்கள் அறிவுரை

எனவே இனி இந்திய ரசிகர்கள் பும்ராவை ஆசிய கோப்பை தொடர் அல்லது 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் மட்டும் தான் பார்க்க முடியும் எனத்தெரிகிறது. ஆண்டு முழுவதும் வேறு ஒரு வேகப்பந்துவீச்சாளரை வைத்து விளையாடிவிட்டு, கடைசி நேரத்தில் பும்ராவை பயன்படுத்தினால் பிரச்சினை ஏற்படும் என வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, February 28, 2023, 21:46 [IST]
Other articles published on Feb 28, 2023
English summary
Team India star pacer Jasprit bumrah to undergo Surgery, likely to take 4 months to cure
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+