Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவுக்கு மாற்றாக வந்த தமிழக வீரர்.. யார் இந்த சந்தீப் வாரியர்? அப்போ சச்சின் மகனுக்கு வாய்ப்பு?

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பும்ரா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு மாற்றாக தமிழ்நாடு கிரிக்கெட் அணி வீரர் சந்தீர் சர்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

5 டைம்ஸ் சாம்பியன் என்று சென்னை அணி ரசிகர்களை மும்பை அணி ரசிகர்கள் கிண்டல் செய்வது வழக்கமானது தான். ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக யார் கண்பட்டதோ தெரியவில்லை, கடந்த சீசனில் கடைசி இடத்தில் முடித்தது.

அதுமட்டுமல்லாமல் எந்த அணியாலும் படைக்கப்படாத சாதனையான 8 போட்டிகளை தொடர்ந்து தோல்வியடைந்து மோசமான சாதனையை படைத்தது.

Jasprit Bumrah was replaced by Tamilnadu Player Sandeep Warrier for Mumbai Indians in IPL 2023

ஆனால் இதற்கும் அடங்காத மும்பை ரசிகர்கள், ஆர்ச்சர் வந்தால் முயற்சி, இல்லையென்றால் பயிற்சி என்று கம்பீரமாக கிண்டல் செய்தவர்களுக்கு பதிலளித்து வந்தனர். அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரில் கிட்டத்தட்ட பும்ரா, ஆர்ச்சர் கூட்டணியை களமிறக்கி மீண்டும் மும்பை அணி கோப்பையை வெல்லும் என்று பார்க்கப்பட்டது.

ஆனால் இம்முறை மும்பை அணிக்கு கண்டம் பும்ராவின் வடிவில் வந்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் காயமடைந்த பும்ரா, இதுநாள் வரை களம் திரும்பாமல் இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் ரிச்சர்ட்சன்- ம் காயத்தால் வெளியேற, மும்பை அணி வேறு வழியில்லாமல் ஆர்ச்சர் மற்றும் பெஹ்ரன்டார்ஃப் மட்டுமே இருக்கிறார்கள். இதில் ஒருவர் காயமடைந்தாலும், மும்பை அணி பாடு திண்டாட்டம் தான்.

Jasprit Bumrah was replaced by Tamilnadu Player Sandeep Warrier for Mumbai Indians in IPL 2023

இந்த நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த ரோகித் சர்மா, பும்ராவுக்கான மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார். பும்ராவுக்கு இணையான இந்திய வீரர் யாரும் இல்லாததால், உள்ளூர் வீரர்களையே தேர்வு நிலைக்கு மும்பை அணி நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் பும்ராவுக்கான மாற்று வீரராக தமிழ்நாடு அணிக்காக விளையாடும் சந்தீப் வாரியர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வலது கை வேகப்பந்துவீச்சாளரான சந்தீப் வாரியர், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்காக விளையாடியுள்ளார். இதுவரை 5 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதேபோல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளதால், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அணி வீரர் சந்தீப் வாரியர் மும்பை அணியில் இணைந்துள்ளதால், சச்சின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதமாகலாம் என்று பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, March 31, 2023, 17:14 [IST]
Other articles published on Mar 31, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+