Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிசம்பர் மாதத்திற்கான ஐசிசி விருது.. பும்ராவுக்கு கிடைத்த கவுரவம்.. கம்மின்ஸ் எல்லாம் ஓரம் போங்க!

மும்பை : டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா வென்று இருக்கிறார். ஐசிசி டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா, ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் தென்னாப்பிரிக்கா வீரர் டான் பேட்டர்சன் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.

இந்த சூழலில் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் சராசரியாக 14 புள்ளி 22 என்று அளவில் சராசரி வைத்திருந்த பும்ராவுக்கு இந்த விருது கிடைத்து இருக்கிறது. அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் பும்ரா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியை பெரிய ஸ்கோர் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தினார்.

jasprit bumrah icc player of the december pat cummins ind vs aus

இதன் மூலம் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் வழக்கம் போல் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். இதேபோன்று பிரிஸ்பேனில் முதலில் ஆறு விக்கெட் வீழ்த்தி அசத்தினர். இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா அந்த போட்டியில் 9 விக்கெட் கைப்பற்றி இருந்தார். அந்த போட்டி சமனில் முடிவடைந்தது.

இது போன்று மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பும்ரா முதல் இன்னிங்ஸ் 4 விக்கெட் வீழ்த்திய நிலையில், இரண்டாவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 234 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது. எனினும் மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் பேட்டிங் சொதப்பினால், 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.

இதன் மூலம் இந்த தொடரில் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். அது மட்டும் இல்லாமல் உலக அளவில் சிறந்த பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற்றிருந்தார். இந்த தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா 200 வது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய நான்காவது வீரர் என்ற பெருமை கிடைத்தது.

அது மட்டும் இல்லாமல் குறைந்த பந்துவீச்சு சராசரியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையும் பும்ராவுக்கு கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக தான் அவருக்கு சிறந்த வீரர்களுக்கான விருது கிடைத்திருக்கிறது. பும்ராவுக்கு கிடைத்த இந்த கௌரவத்தை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Tuesday, January 14, 2025, 16:34 [IST]
Other articles published on Jan 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+