Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"பும்ராவை விமர்சிப்பதற்கு முன் இதை யோசித்து பாருங்க.. உங்களுக்கு என்ன தெரியும்"- புவனேஸ்வர் குமார்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் புவனேஸ்வர் குமார் பும்ராவுக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்து இருக்கின்றார். நடந்து முடிந்த ஆண்டர்சன்- டெண்டுல்கர் கோப்பையில் பும்ரா வெறும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடினார். இது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

பலரும் பும்ரா ஏன் 5 போட்டிகளில் விளையாடவில்லை என்று விமர்சித்து வந்தனர். முழு உடல் தகுதி இல்லை என்றால் எதற்கு இந்த தொடரில் அவர் விளையாட வேண்டும் என்றும் பலரும் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

Bhuvaneshwar Kumar on Bumrah

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார், "பும்ராவுக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதில் பும்ரா எத்தனை ஆண்டுகளாக இந்திய அணிக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார் என்பதை பாருங்க."

"எந்த வீரராக இருந்தாலும், அது நிச்சயம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். அதுவும் பும்ரா போன்ற பந்துவீச்சு ஸ்டைல் உடையவர்களுக்கு காயம் அடிக்கடி ஏற்படும். பும்ரா மூன்று போட்டிகளில் விளையாடியதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அவர் விளையாடும் போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்."

"ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட வில்லை என்றாலும் அவர் ஆடிய மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விக்கெட் எடுக்கும் வரை எனக்கு அதில் எந்த சிக்கலும் இல்லை. ஒரு வீரர் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பல ஆண்டுகள் விளையாடுவது எவ்வளவு கடினமான விஷயம் என்று மக்களுக்கு புரிவதில்லை."

"பும்ரா கடினமான சூழ்நிலைகளில் பந்து வீசி வருகின்றார். அவருடைய உடலுக்கும் மனதுக்கும் அது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். ஒரு வீரர் நீண்ட காலம் விளையாட வேண்டும் என்றால், இதை எல்லாம் சமாளித்து ஆக வேண்டும். பும்ரா முதல்முறையாக இந்திய அணிக்கு வந்தபோது அவர் ஒரு ஸ்பெஷலான வீரர் என்பதை நாங்கள் அனைவரும் உணர்ந்தோம். அவருடைய திறமை எது மாறவில்லை."

"இன்று அவர் எவ்வளவு நல்ல வீரராக இருக்கிறாரோ, அதேபோல் தான் அப்போதும் இருந்தார். இத்தனை ஆண்டுகளில் அவருடைய நம்பிக்கை பல மடங்கு அதிகரித்து இருக்கின்றது. அணியில் முக்கிய வீரராக மாறிய பிறகு ஏதேனும் தவறாக நடந்தால் அதைப்பற்றி நாம் பதற்றம் அடையக் கூடாது" என்று புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து தொடரில் பும்ரா வெறும் மூன்று டெஸ்ட் போட்டியில் விளையாடினாலும், இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி 14 விக்கெட்டுகளை மொத்தமாக கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 15, 2025, 16:31 [IST]
Other articles published on Aug 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+