Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா வைத்து பிசிசிஐ மெகா பிளான்.. 9 டெஸ்ட் ரொம்ப முக்கியம்.. ஓய்வு கொடுக்க திட்டம்

மும்பை: இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமை மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் (WTC) மீதமுள்ள போட்டிகளில் அவர் பங்கேற் வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. WTC தரவரிசையில் தற்போது ஆறாவது இடத்தில் உள்ள இந்திய அணிக்கு மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப பும்ரா முக்கியம். இதனால், சில ஒருநாள் போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னுரிமை அளித்து அவரின் பணிச்சுமையை நிர்வகிக்க BCCI திட்டமிட்டுள்ளது.

19வது ஐபிஎல் சீசன் நடக்கும் வேளையிலும், இந்திய ஆடவர் தேர்வுக் குழுவினர் வரவிருக்கும் சர்வதேச போட்டிகளுக்கு தயாராகி வருகின்றனர். ஜஸ்பிரித் பும்ராவின் பணிச்சுமை ஒரு முக்கியமான கவலையாக உள்ளது. நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்தியாவின் மீதமுள்ள ஒன்பது டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா பங்கேற்பார் என BCCI எதிர்பார்க்கிறது.

WTC தரவரிசையில் ஆறாம் இடத்தில் உள்ள இந்தியா, சொந்த மண்ணில் ஏற்கெனவே ஒரு தொடரை முழுமையாக இழந்துள்ளது. அடுத்து இலங்கை மற்றும் நியூசிலாந்துடன் தலா இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையில் நிர்வாகம் கவனம் செலுத்தினாலும், இந்தியாவின் WTC பயணத்தை மீட்டெடுப்பதே உடனடி இலக்காகும். இந்த முக்கியமான முயற்சிக்கு வேகப்பந்துவீச்சாளர் பும்ரா மையமாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

"ஜஸ்பிரித் பும்ராவை அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட வைக்க தேவையான உடற்தகுதியுடன் வைத்திருப்பதே எங்கள் நோக்கம்," என்று BCCI வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. "இலங்கை மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது."

"அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்காக அவரைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பது சற்று சவாலானது. தேவைப்பட்டால், சில ஒருநாள் தொடர்களில் அவருக்கு ஓய்வளிக்க தேர்வாளர்கள் தயங்க மாட்டார்கள். கடந்த செப்டம்பரில் நடந்த ஆசிய கோப்பையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டி20 கிரிக்கெட் விளையாடியபோதும் அவர் சிறப்பாகச் செயல்பட்டார்," என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன,

2026 ஐபிஎல் முடிவடைந்த சில நாட்களுக்குப் பின் தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் டெஸ்டில் இந்தியா பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கலாம் எனத் தெரிவித்தது. எனினும், ஜூன் 6 ஆம் தேதி முல்லன்பூரில் நடைபெறும் அதே அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் அவர்கள் மீண்டும் களமிறங்கலாம்.

ஆப்கானிஸ்தான் தொடர் குறித்த இறுதி முடிவு, நடப்பு ஐபிஎல் சீசன் முடிவில் எடுக்கப்படும். "டெஸ்ட் போட்டிகளை தீவிரமாக அணுகுவது முக்கியம். WTC க்கு வெளியே இருந்தாலும், ஆப்கானிஸ்தான் டெஸ்ட் ஒரு சிறந்த போட்டிப் பயிற்சியாக அமையும். முன்னணி வீரர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கேற்ப ஒரு முடிவு எடுக்கப்படும்," என்று பிசிசிஐ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டனான சுப்மன் கில், முக்கிய டெஸ்ட் தொடர்களுக்கு முன்னதாக அதிக தயாராகும் நேரம் தேவை என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Story first published: Thursday, April 23, 2026, 9:40 [IST]
Other articles published on Apr 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+