Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஒரு கொண்டாட்டம் இல்லீங்க... அது நிறைய பேருக்கு சாப்பாடு போடுது... அத நிறுத்தக்கூடாது!

டெல்லி : இந்தியாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவலையடுத்து நாடே ஸ்தம்பித்து காணப்படுகிறது.

Recommended Video

T20 World Cup 2021: ICC plans for Backup Venue | OneIndia Tamil

இதனிடையே, இந்த வேளையில் ஐபிஎல் கொண்டாட்டங்கள் அவசியமா என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ஐபிஎல் என்பது கொண்டாட்டம் அல்ல என்றும் அது வீரர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வாதாரமாக உள்ளதாக ராஜஸ்தான் பௌலர் தெரிவித்துள்ளார்.

20 போட்டிகளை கடந்த தொடர்

20 போட்டிகளை கடந்த தொடர்

ஐபிஎல் 2021 தொடர் சிறப்பாக துவங்கி 20 போட்டிகளை கடந்து நடைபெற்று வருகிறது. கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகரித்து காணப்படும் நிலையிலும், இந்த போட்டிகளை பிசிசிஐ சிறப்பான பயோ பபுள் உள்ளிட்டவற்றை பராமரித்து நடத்தி வருகிறது. ஒரு சில வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையிலும் அதிகமான பாதிப்பு இல்லை.

கொரோனா அச்சம்

கொரோனா அச்சம்

ஆயினும் இதுவரை இந்திய வீரர் அஸ்வின், ஆஸ்திரேலிய வீரர்கள் ஆன்ட்ரூ டை, ஆடம் சம்பா, கேன் ரிச்சர்ட்சன் மற்றும் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் ஐபிஎல்லில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளனர். இதையடுத்து ஐபிஎல்லை நிறுத்தும்படி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

உனாத்கட் வலியுறுத்தல்

உனாத்கட் வலியுறுத்தல்

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பௌலர் ஜெய்தேவ் உனாத்கட் ஐபிஎல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஐபிஎல் என்பது கொண்டாட்டம் இல்லை என்றும் அது அதிகமானோருக்கு வேலையாக உள்ளது என்றும் உனாத்கட் மேலும் கூறியுள்ளார்.

வாழ்வாதாரமான ஐபிஎல்

வாழ்வாதாரமான ஐபிஎல்

வீரர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வாதாரமாக ஐபிஎல் உள்ளதாகவும் உனாத்கட் தெரிவித்துள்ளார். தன்னுடைய குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை தான் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ள உனாத்கட், நாம் இந்த விஷயத்தில் மருத்துவர்களாக மாற முடியாது ஆனால் சிறப்பான உதவியை செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, April 27, 2021, 17:57 [IST]
Other articles published on Apr 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+