Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிறிஸ்துமஸ்க்கு லீவ் விடறாங்களாம்... இன்னைக்கு கடைசி மேட்ச்... பார்க்க தவறாதீங்க!

வாஸ்கோ : ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 38வது போட்டி கோவாவின் வாஸ்கோவில் திலக் மைதானத்தில் இன்றிரவு நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் ஜாம்ஷெட்பூர் எப்சி மற்றும் எப்சி கோவா அணிகள் மோதவுள்ளன.

தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ஜாம்ஷெட்பூர் அணி இந்த போட்டியில் தனது வெற்றியை தொடர முனைப்பு காட்டி வருகிறது.

38வது போட்டி

38வது போட்டி

ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 38வது போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ள நிலையில், இந்த போட்டியில் ஜாம்ஷெட்பூர் எப்சி மற்றும் எப்சி கோவா அணிகள் மோதவுள்ளன. தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் தனது வெற்றியை தொடர இந்த போட்டியில் முனைப்பு காட்டி வருகிறது.

வெற்றிக்கான தீவிரம்

வெற்றிக்கான தீவிரம்

இதனிடையே கடந்த 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள எப்சி கோவா அணி, இந்த போட்டியை வெற்றியுடன் முடிக்க தீவிரத்துடன் உள்ளது. இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் 2 வெற்றிகளையும் 2 போட்டிகளை டிரா மற்றும் 3 போட்டிகளில் தோற்றுள்ளது எப்சி கோவா அணி.

கோலுக்கான எதிர்பார்ப்பு

கோலுக்கான எதிர்பார்ப்பு

இந்தப் போட்டியில் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் தலா 6 கோல்களை போட்டுள்ள கோவா அணியின் வீரர் இகோர் ஆங்குலோ மற்றும் ஜாம்ஷெட்பூர் அணியை சேர்ந்த நெரிஜூஸ் வால்ஸ்கிஸ் ஆகியோர் சமநிலையில் உள்ள நிலையில், இருவரில் இந்த போட்டியில் யார் கோல் போட்டு மற்றவரை முந்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

இன்றிரவு 7.30 மணியளவில் கோவாவின் வாஸ்கோவில் திலக் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் ஜியோ டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறை விடப்பட உள்ள நிலையில், இன்றைய போட்டி இறுதியாக நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் இந்த போட்டியை காண ஆவலுடன் உள்ளனர்.

Story first published: Wednesday, December 23, 2020, 17:57 [IST]
Other articles published on Dec 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+