Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"மேட்ச் டை ஆனா தோத்துட்டோம்னு சொல்றாங்க".. ஸ்கோரர் செய்த குளறுபடி.. பிசிசிஐயிடம் ஜார்க்கண்ட் புகார்

நாக்பூர்: பெண்களுக்கான 19 வயதுக்குட்பட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், அதிகாரப்பூர்வ ஸ்கோரர் செய்த தவறால் தங்களது வெற்றி அநீதியாகப் பறிபோனதாக ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. உத்தரகாண்ட் அணிக்கு எதிரான நாக்-அவுட் போட்டியில் போட்டி சமனில் முடிந்த போதும், ஸ்கோரரின் கவனக்குறைவால் தாங்கள் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றதாக அறிவிக்கப்பட்டு தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறி, பிசிசிஐயிடம் ஜார்க்கண்ட் சங்கம் புகார் கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த உத்தரகாண்ட் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஜார்க்கண்ட் அணி 133 ரன்களுக்கு ஆல்-அவுட்டானதாகக் குறிப்பேட்டில் பதிவானது. இதனால் உத்தரகாண்ட் 1 ரன் வித்தியாசத்தில் வென்றதாக நடுவர்கள் அறிவித்தனர். ஆனால் உண்மையில் இந்த ஆட்டம் டையில் முடிந்ததாக ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது. ஆட்டத்தின் 19.4-வது ஓவரில் 2-வது ரன் ஓட முயன்ற போது ஜார்க்கண்ட் வீராங்கனை ரன் அவுட் செய்யப்பட்டார்.

Jharkhand Submits BCCI Complaint Scorer Blunder Knocks Team Out After Match Ties

வீராங்கனைகள் ஓடி முடித்த அந்த முதல் ரன் மைதானத்தில் இருந்த டிஜிட்டல் திரையில் சரியாக ஏற்றப்பட்டது. ஆனால் ஆட்டத்தை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யும் முக்கிய ஸ்கோரர், ரன் அவுட்டை மட்டுமே குறித்துவிட்டு பேட்டர்கள் ஓடி முடித்த 1 ரன்னை கணக்கில் சேர்க்க மறந்துவிட்டார். இதனால் மைதானத் திரையில் கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை எனக் காட்டப்பட்டது. அதன்படி கடைசி பந்தில் ஜார்க்கண்ட் பேட்டர் 1 ரன் எடுத்ததால் போட்டி டை ஆகிவிட்டதாக நினைத்து ஜார்க்கண்ட் அணி மகிழ்ச்சியடைந்தது.

IND vs NZ:

IND vs NZ: "வைபவை தூக்கிட்டு இந்த தமிழக வீரரை எடுங்க.. அப்போதான்..".. பத்ரிநாத் கொடுத்த அதிரடி யோசனை

ஆனால் ஸ்கோரரின் பதிவேட்டில் அந்த ரன் விடுபட்டதால் ஜார்க்கண்ட் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. மைதான திரையை விட ஸ்கோரரின் பதிவே முடிவானது என்ற விதிமுறை ஜார்க்கண்டிற்கு பெரும் அநீதியாக மாறி உள்ளது. ஜார்க்கண்ட் அணியினர் நீண்ட நேரம் முறையிட்டும் ஸ்கோரர் தனது பிழையை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் பிசிசிஐ உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜார்க்கண்ட் நிர்வாகம் போர்க்கொடி தூக்கியுள்ளது.

Story first published: Tuesday, October 27, 2026, 10:55 [IST]
Other articles published on Oct 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+