Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் வந்தால் தான் ஃபில்டிங் கண்ணுக்கு தெரியுது.. உலகின் சிறந்த ஃபில்டர் யார்?ஜாண்டி ரோட்ஸ் கருத்து

மும்பை : ஐபிஎல் தொடர் வந்தால் தான் ஃபில்டிங் குறித்து அனைத்து அணிகளும் முக்கியத்துவம் கொடுப்பதாக தென்னாப்பிரிக்க அணியின் ஜாண்டி ரோட்ஸ் வேதனை தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஃபில்டிங் என்பது மிகவும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வீரர்கள் பிடிக்கும் ஒரு கேட்ச் அல்லது ரன்களை தற்காக்கும் முறை ஆட்டத்தின் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதனால் ஒவ்வொரு அணிகளும் ஃபில்டிங்கிற்கு மிகவும் முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்கா அணியின் ஜாம்பவான், ஜாண்டி ரோட்ஸ் டி20 கிரிக்கெட்டில் மட்டும்தான் பில்டிங்கிற்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பதாக கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கூட யாரும் பில்டிங்கில் கவனம் செலுத்துவதில்லை.

Jhonty Rhodes on importance of fielding and best fielder in the world

ஆனால் ஐபிஎல் தொடங்கியவுடன் அனைவரும் ஃபில்டிங் குறித்து பேசுகிறார்கள்.அனைத்து அணிகளிலும் ஃபில்டிங்கிற்கு என தனி பயிற்சியாளர்கள் இல்லை. ஏனென்றால் 50 ஓவர் போட்டியில் உங்களுக்கு நிறைய நேரம் இருக்கும். உங்கள் அணியில் மூன்று நான்கு நல்ல ஃபீல்டர்கள் இருந்தாலே மற்ற ஆறு ஏழு பேரை நீங்கள் மறைத்து வைத்து விடலாம். ஆனால் ஐபிஎல் தொடங்கியவுடன் ஃபில்டிங் பற்றி உங்களுக்கு தெரியும்.

ஐபிஎல் தொடங்கி இத்தனை ஆண்டுகள் ஆகிறது. முன்பெல்லாம் ஃபில்டிங் என்றால் மூன்று நான்கு பேரை பற்றி தான் பேசுவார்கள். இப்போது ஒட்டு மொத்த ஆணியும் சிறப்பாக பில்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஃபில்டிங்கில் கவனம் செலுத்த உங்களுக்கு அப்படி என்ன கடினமாக இருக்கிறது. பில்டிங் என்பது ஒழுக்கம் போன்றது. இதனை பில்டிங் பயிற்சியாளர் வைத்து நாம் சரி செய்ய வேண்டும்.

Jhonty Rhodes on importance of fielding and best fielder in the world

பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு என தனியாக பயிற்சி செய்வது போல் ஃபில்டிங்கிற்கும் தனிப் பயிற்சியை வீரர்கள் செய்ய வேண்டும். ஏனென்றால் ஃபில்டிங் தற்போது கிரிக்கெட்டின் முக்கிய பகுதியாக மாறிவிட்டது. ஃபில்டிங்கிற்கு என நிறைய பயிற்சியாளர்கள் தேவை. நான் ஏதேனும் ஒரு கிரிக்கெட் பயிற்சி முகாமுக்கு சென்றால், என்னால் இரண்டு வாரம் மட்டும்தான் பயிற்சி கொடுக்க முடியும்.

ஆனால் அதனை அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டுமென்றால்,நிறைய பயிற்சியாளர்கள் தேவை. இளம் வயதிலே எப்படி சரியாக ஃபில்டிங் செய்ய வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். தற்போது உலக அளவில் சிறந்த ஃபில்டர் யார் என்று கேட்டால் நான் இந்திய வீரர் ஜடேஜாவை மட்டும் தான் சொல்வேன். ஏனென்றால் அவர் டாப் குவாலிட்டி ஃபில்டராக இருக்கிறார். இது சிஎஸ்கே அணியின் பெரிய பலமாகவும் பார்க்கிறேன் என ஜாண்டி ரோட்ஸ் கூறியுள்ளார்.

Story first published: Thursday, March 30, 2023, 10:55 [IST]
Other articles published on Mar 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+