சச்சின் சாதனையை முறியடித்தார் ஜோ ரூட்..!! மீண்டும் சொதப்பிய இங்கிலாந்து.. வெற்றியை நோக்கி ஆஸி.
அடிலெய்ட் : அடிலெய்ட் நகரில் நடைபெற்று வரும் ஆஷஸ் பகல் இரவு டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித், லாபஸ்சேங், வார்னரின் அதிரடியால் அந்த அணி 473 ரன்களுக்கு 9 விக்கெட் எடுத்து டிக்ளேர் செய்தது.

இங்கிலாந்து தடுமாற்றம்
இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ஹசிப் ஹமீது 6 ரன்களும், ரோரி பர்ன்ஸ் 4 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 17 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற ஸ்கோருடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து. வழக்கம் போல் அணியை சரிவிலிருந்து மீட்கும் பொறுப்பு, டேவிட் மாலன், ஜோ ரூட் தலையில் வந்து விழுந்தது

ஜோ ரூட் சாதனை
இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடக்க,இங்கிலாந்து ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை கிடைத்தது. ஜோ ரூட், நடப்பாண்டில் 1600 ரன்களை கடந்தார். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட்ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் சச்சினை முந்தினார் ஜோ ரூட். ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன் அடித்த வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற இன்னும் 183 ரன்கள் தேவைப்படுகிறது

இங்கிலாந்த சொதப்பல்
ஜோ ரூட் 62 ரன்களும், மாலன் 80 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க, 3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 138 ரன்கள் சேர்த்தது.இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்த அணி 150 ரன்களக்கு 2 விக்கெட் என்ற ஸ்கோரிலிருந்து அடுத்த 86 ரன்கள் சேர்ப்பதற்குள் மேலும் 8 விக்கெட்டுகளை இழந்தது.இதன் மூலம் இங்கிலாந்து அணி 236 ரன்களுக்கு சுருண்டது.

வலுவான நிலையில் ஆஸி
237 ரன்கள் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றது. ஃபாலோ ஆன் தராமல் மீண்டும் பேட்டிங் செய்ய ஸ்மித் தீர்மானித்தார். மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற ஸ்கோருடன் இருந்தது. தற்போது வரை இங்கிலாந்தை விட ஆஸ்திரேலிய அணி 282 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications