Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜோ ரூட் அதிரடி ஆட்டம்.. ஒருநாள் கிரிக்கெட்டிலும் சச்சின் சாதனை முறியடிப்பு

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் புதிய வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், வெறும் 40 பந்துகளில் அதிரடியாக அரைசதம் கடந்தார் ஜோ ரூட். இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 6 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்த இங்கிலாந்தின் முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 6 அல்லது அதற்கு மேற்பட்ட முறை அரைசதங்களை அடித்த 13-வது பேட்டர் ஜோ ரூட் ஆவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து வரும் ஜோ ரூட், தற்போது ஒருநாள் போட்டியிலும் அவரது சாதனையை விஞ்சியுள்ளார். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கடந்த 1994 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 5 அரைசதங்களை மட்டுமே அடித்திருந்தார்.

Joe root

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்ச்சியான 50-பிளஸ் ரன்கள் இதுவரை 41 முறை பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2016-ஆம் ஆண்டில் ஜோ ரூட் நிகழ்த்திய சாதனையும் அடங்கும். உலகளவில் 36 தனித்துவமான பேட்டர்கள் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். இவர்களில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அதிகபட்சமாக 5 முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மா எப்போது ஓய்வு பெறுவார்? மாதத்தை கணித்து சொன்ன பிரபல ஜோதிடர்

ரோகித் சர்மா எப்போது ஓய்வு பெறுவார்? மாதத்தை கணித்து சொன்ன பிரபல ஜோதிடர்

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக அரைசதங்கள் விளாசிய பேட்டர்களின் பட்டியலில் பாகிஸ்தானின் ஜாவேத் மியான்டட் முதலிடத்தில் உள்ளார். அவர் 1987-ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் அரைசதம் கடந்து வரலாற்று சாதனை படைத்தார். அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் இமாம்-உல்-ஹக் 2021-2022 ஆண்டு தொடர்ச்சியாக 7 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸின் கார்டன் கிரீனிட்ஜ் 1979-1980 ஆண்டிலும், நியூசிலாந்தின் ஆண்ட்ரூ ஜோன்ஸ் 1988-1989 ஆண்டிலும், ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் 1999 ஆண்டிலும், பாகிஸ்தானின் முகமது யூசுப் 2003 ஆண்டிலும் ஆகியோர் தொடர்ச்சியாக 6 முறை அரைசதங்களை விளாசியுள்ளனர்.

IND vs ENG: இரு அணி வீரர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது ஏன்?

IND vs ENG: இரு அணி வீரர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவது ஏன்?

மேலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் 2015 ஆண்டிலும், ராஸ் டெய்லர் 2018-2019 ஆண்டிலும், வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் 2018-2019 ஆண்டிலும், அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் 2019 ஆண்டிலும், வெஸ்ட் இண்டீஸின் ஷாய் ஹோப் 2020-2021 ஆண்டிலும் மற்றும் பாகிஸ்தானின் பாபர் அசாம் 2021-2022 ஆண்டிலும் ஆகியோரும் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளனர். தற்போது இந்த எலைட் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டும் இணைந்துள்ளார்.

Story first published: Sunday, July 19, 2026, 20:02 [IST]
Other articles published on Jul 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+