Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 சச்சின் சாதனைகளுக்கு குறி வைத்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்.. இந்திய தொடரில் முறியடிக்க வாய்ப்பு

லண்டன்: சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்புள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இது குறித்த சில புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

தற்போது சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வரும் வீரர்களில் அதிக ரன்களைக் குவித்த வீரராக ஜோ ரூட் உள்ளார். உலக அளவில் அதிக டெஸ்ட் ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இவர் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். இந்தச் சூழலில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த டெஸ்ட் தொடரில் ஜோ ரூட், சச்சினின் எந்தெந்த சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளது என்று பார்க்கலாம்.

Joe Root Sachin Tendulkar IND vs ENG Test Series

தற்போது இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிக அரை சதங்களை அடித்த வீரராக சுனில் கவாஸ்கர் இருக்கிறார். அவர் 16 அரை சதங்களை அடித்துள்ளார். அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 13 அரை சதங்களுடன் இருக்கிறார். ஜோ ரூட் தற்போது 11 அரை சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் இன்னும் மூன்று அரை சதங்கள் அடித்தால் சச்சினின் சாதனையை முறியடித்து விடுவார். ஐந்து அரை சதங்களை அடித்தால் அவர் சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்வார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரராக விராட் கோலி இருக்கிறார். அவர் 4036 ரன்கள் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சச்சின் டெண்டுல்கர் 3990 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஜோ ரூட் தற்போது 3858 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் இன்னும் 133 ரன்கள் எடுத்தால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார். 179 ரன்கள் எடுத்தால் விராட் கோலியின் சாதனையை முறியடிப்பார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான சர்வதேசப் போட்டிகளில் அதிக ஐம்பது ரன்கள் (அரை சதம் மற்றும் சதம்) அடித்த வீரர்கள் பட்டியலில் தற்போது ஜோ ரூட் 28 ஐம்பது+ ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். அவர் இந்திய அணிக்கு எதிராக 13 சதங்கள் மற்றும் 15 அரை சதங்களை அடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் தலா 32 ஐம்பது+ ரன்கள் அடித்துள்ளனர். இன்னும் ஐந்து ஐம்பது ரன்களை அடித்தால் ஜோ ரூட் அவர்கள் இருவரையும் முந்துவதற்கு வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, June 19, 2025, 9:42 [IST]
Other articles published on Jun 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+