For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எப்படி இருக்கு.. அஸ்வின், சஞ்சு சாம்சன் குறித்து ஜோ ரூட் சொன்ன ஒரு வார்த்தை

ஜெய்ப்பூர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறார். ஆனால் தற்போது தான் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்கிறார். ஜோ ரூட் சிலமுறை ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை கொடுத்திருந்தாலும் அவரை எந்த அணியும் தேர்வு செய்யாது.இதனால் கடுப்பான ஜோ ரூட் சில சீசனங்களில் தனது பெயரை ஏலத்தில் கொடுக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இந்தியாவில் நடைபெறுவதால் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் நோக்கி குவிந்து வருகின்றனர். தற்போது ஜோ ரூட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கி இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை பட்லர், ஜோ ரூட், அஸ்வின், சஞ்சு சாம்சன், படிக்கல் போன்ற திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்.

Joe Root shares his Excitement to play in first IPL season

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குறித்து ஜோ ரூட் அளித்துள்ள பேட்டியை தற்போது பார்க்கலாம். கடந்த ஆண்டு எங்களுக்கு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இறுதிப்போட்டி வரை நாங்கள் சென்றிருந்தோம். சஞ்சு சாம்சன் மிகவும் திறமைசாலியான வீரர். அவர் ஒரு கிரிக்கெட் வீரராகவும் தலைவராகவும் ஒவ்வொரு ஆண்டும் மெருகேறி வருகிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு குடும்பம் போல் இருக்கிறது. களத்தில் சிறப்பாக செயல்படும் என்பதை விட அனைவரும் முதலில் திருப்தியாக இருக்க வேண்டும் என்பதை அணி நிர்வாகம் உறுதி செய்கிறார்கள். நான் அணிக்குள் வந்ததுமே எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஐ பி எல் தொடரில் விளையாடும் அனுபவமும் சூழலும் வேறு எங்கும் கிடைக்காது. அதை நான் அனுபவிக்க காத்திருக்கிறேன்.

Joe Root shares his Excitement to play in first IPL season

இத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருக்கிறேன். சர்வதேச அனுபவம் இருந்தும் ஐபிஎல் தொடரில் தற்போது தான் முதன்முறையாக விளையாடுகிறேன். இதை நினைக்கும் போது எனக்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறது. ஐபிஎல் குறித்து நான் பல விஷயங்களை வீரர்களிடம் கேட்டிருக்கிறேன். அதை நான் முதல் முதல் முறையாக அனுபவிக்க போகிறேன்.

இந்த ஆண்டு நிச்சயம் எங்களுக்கு ஸ்பெஷலான ஆண்டாக இருக்கும். ஏனெனில் ஜெய்ப்பூருக்கு ராஜஸ்தான் அணி மீண்டும் ரசிகர்கள் முன் விளையாடுகிறது. ரியான் பராக், கடந்த ஆண்டு பல முக்கியமான இன்னிங்சை ஐபிஎல் தொடரில் ஆடி இருக்கிறார்.தற்போது ஒரு வீரராக அவர் முதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

Joe Root shares his Excitement to play in first IPL season

அஸ்வினுடன் இணைந்து பணியாற்றுவதை நான் மிகவும் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அஸ்வின் ஒரு மேட்ச் வின்னர். அவருடன் இணைந்து செயல்படுவது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன். அவர் எப்படி தயாராகிறார் என்பதை பக்கத்தில் இருந்து என்னால் பார்க்க முடியும். அவருடன் ஒரு நல்ல ஞாபகங்களை சேகரிக்க விரும்புகிறேன் என ஜோ ரூட் கூறியுள்ளார்.

Story first published: Thursday, March 30, 2023, 12:36 [IST]
Other articles published on Mar 30, 2023
English summary
Joe Root shares his Excitement to play in first IPL season
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+