Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பயிற்சியெல்லாம் சிறப்பா துவக்க போறாரு... ஆனாலும் ஐபிஎல்லுல பங்கேக்கறது பத்தி யோசிக்கலையாம்!

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முக்கிய பௌலர் ஜோப்ரா ஆர்ச்சர்.

நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி கண்டுள்ளது.

பஞ்சாப் அணிக்கு அதிகமான ரன்களை கொடுத்ததே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.

அணி வீரர் ஜோப்ரா ஆர்ச்சர்

அணி வீரர் ஜோப்ரா ஆர்ச்சர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சாளராக விளையாடிவரும் ஜோப்ரா ஆர்ச்சர், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். இதையடுத்து அவர் ஐபிஎல் 2021 தொடரில் பங்கேற்பது குறித்த முடிவை இன்னும் எடுக்கவில்லை.

4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

நேற்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளது. எதிரணிக்கு ஏராளமான ரன்களை கொடுத்தது இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

இந்நிலையில் ஆர்ச்சர் அணியில் இல்லாதது பெரிய குறையாக பார்க்கப்படுகிறது. அவர் நேற்றைய போட்டியில் இடம்பெற்றிருக்கும்பட்சத்தில் தன்னுடைய சிறப்பான பௌலிங்கால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் ரன்களை குறைத்திருக்க முடியும்.

ஐபிஎல் குறித்து முடிவெடுக்கவில்லை

ஐபிஎல் குறித்து முடிவெடுக்கவில்லை

இந்நிலையில் கையில் அடிபட்டு தொடர்ந்து ஓய்வில் இருந்துவரும் ஆர்ச்சர் தன்னுடைய மருத்துவர்களின் ஆலோசனையின்படி தற்போது தனது பயிற்சிகளை துவக்கியுள்ளார். ஆனால் அவர் ஐபிஎல் தொடரில் இணைவது குறித்த எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சிகள் துவக்கம்

பயிற்சிகள் துவக்கம்

வலது கையின் நடுவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆர்ச்சருக்கு கடந்த 29ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவர் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், சிறிய அளவில் அவர் தனது பயிற்சிகளை துவக்க மருத்துவர்கள் அனுமதி அளித்துள்ளதையடுத்து அவர் தனது பயிற்சிகளை துவக்கியுள்ளார்.

Story first published: Tuesday, April 13, 2021, 19:35 [IST]
Other articles published on Apr 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+