Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்படி என்ன சிரிப்பு... பும்ராவை இமிடேட் செய்த ஆர்ச்சர்... ரசிகர்களை அள்ளிய சிரிப்பு

துபாய் : நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஜோப்ரா ஆர்ச்சர்

போட்டியின் இடையில் மும்பை இந்தியன்சின் ஜஸ்பிரீத் பும்ராவின் பௌலிங் ஸ்டைலை புன்னகைக்கு இடையில் இமிடேட் செய்தார் ஆர்ச்சர்.

Jofra Archer Shares A Laugh After Copying Jasprit Bumrahs Action

இந்த நிகழ்வின் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐபிஎல் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோ ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் குவின்டன் டீ காக் மற்றும் சௌரப் திவாரி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் ராஜஸ்தான் அணியின் ஜோப்ரா ஆர்ச்சர்.

மேலும் போட்டியின் இடையில் ஜஸ்பீரீத் பும்ராவின் பௌலிங் ஸ்டைலை சிரிப்புக்கிடையில் அவர் இமிடேட் செய்தது காண்பவர்களை கவர்ந்தது. இந்த நிகழ்வை ஐபிஎல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், ரசிகர்களின் லைக்குகளையும் அள்ளியது.

பும்ரா மற்றும் ஆர்ச்சர் இருவரும் 17 விக்கெட்டுகளை இந்த சீசனில் வீழ்த்தியுள்ள நிலையில், ரேட்டிங் அடிப்படையில் காகிசோ ரபடாவை ஆர்ச்சர் இரண்டாவதாக பின்தொடர்கிறார்.

Story first published: Monday, October 26, 2020, 19:22 [IST]
Other articles published on Oct 26, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+