என்னாது.. பும்ரா பேபி பௌலரா.. ரசாக்கு இது செம ஜோக்கு... டிவிட்டரில் வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!
Recommended Video
டெல்லி : இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஒரு பேபி பௌலர் என்று கருத்து தெரிவித்த பாகிஸ்தான் ஆல்- ரவுண்டர் அப்துல் ரசாக்கை நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளியுள்ளனர்.
ஜஸ்பிரீத்தை பேபி பௌலர் என்று கூறியதுதான் இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஓய்வு காலத்தை மகிழ்ச்சியாக கழிக்காமல், இத்தகைய போஸ்ட்களை போடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பேட்டிங் சராசரி 30க்கும் கீழ் உள்ள அப்துல் ரசாக், ஒருநாள் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் பௌலிங்கில் முதலிடத்தில் உள்ள பும்ராவை வம்புக்கு இழுப்பது குறித்து அவர்கள் பல்வேறு எமோஜிகளையும் போஸ்ட் செய்துள்ளனர்.

தரவரிசையில் முதலிடம் பெற்ற பும்ரா
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தொடர்ந்து தனது சிறப்பான பந்துவீச்சால் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் முதலிடத்திலும் டெஸ்ட் போட்டிகளில் 5வது இடத்தையும் பிடித்துள்ளார்.

பேபி பௌலர் என விமர்சனம்
இந்நிலையில் பாகிஸ்தானின் ஆல்-ரவுண்டர் அப்துல் ரசாக், பும்ரா ஒரு பேபி பௌலர் என விமர்சித்துள்ளார். வசிம் அக்ரம், மெக்கிராத் உள்ளிட்ட பௌலர்களுடன பணியாற்றிய தான் தற்போது இருந்திருந்தால், அவரை எளிதாக வீழ்த்தியிருப்பேன் என்றும் விமர்சித்திருந்தார்.
"ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை"
இதையடுத்து நெட்டிசன்கள் குறிப்பாக இந்திய ரசிகர்கள், ரசாக்கை கலாய்த்து தள்ளினர். பும்ரா ஒரு பேபி பௌலர் என்று தெரிவித்த ரசாக்கின் கருத்து இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
வம்பு பேச வேண்டாம்
மேலும் ஓய்வு காலத்தை அப்துல் ரசாக் அமைதியாக கழிக்க வேண்டும் என்றும், இத்தகைய வம்பு பேச்சுக்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக கோப்பையில் விக்கெட்
கடந்த 2011ல் நடைபெற்ற உலகக கோப்பையில் மிதமான மணிக்கு 116 வேகத்தில் இந்திய வீரர் முனாப் படேல் வீசிய பந்தில் அப்துல் ரசாக் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதையும் ரசிகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications