Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஃப்கானிஸ்தான் வெற்றிக்கு காரணமான முன்னாள் இங்கிலாந்து வீரர்.. கொண்டாடி மகிழ்ந்த ஜானதன் ட்ராட்!

டெல்லி: உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனை சாய்த்து ஆஃப்கானிஸ்தான் அணி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு அணிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் சுழற்பந்துவீச்சுக்கு ஓரளவிற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் டெல்லி மைதானத்திலேயே வலிமையான இங்கிலாந்து அணியை வீழ்த்தியுள்ளது. அதனால் சுழற்பந்துவீச்சிற்கு முழு ஒத்துழைப்பை வழங்கும் சென்னை மற்றும் லக்னோ மைதானங்களில் ஆஃப்கானிஸ்தான் அணியால் இன்னும் வீரியமாக செயல்பட முடியும் என்று பர்க்கப்படுகிறது.

Jonathan Trott is the reason behind Afghanistan win against England in the World Cup 2023

அதேபோல் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி சிறிய அணிகளிடம் தோல்வியடைவது முதல்முறையல்ல. ஏற்கனவே வங்கதேச அணியிடம் இரு முறையும், அயர்லாந்து அணியிடம் ஒரு முறையும் தோல்வியடைந்திருக்கின்றன. இந்த 3 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததற்கு ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்விக்கு, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜானதன் ட்ராட்-ம் முக்கிய காரணமாக உள்ளார்.

இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோவ், பட்லர், ஸ்டோக்ஸ், ரஷீத், மொயின் அலி உள்ளிட்ட இளம் வீரர்களாக இருந்த போது, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவராக இருந்தவர் ட்ராட். இதனால் இங்கிலாந்து அணியின் பிரச்சனைகள், அவர்களின் தயாரிப்புகள் அத்தனையும் ஜானதன் ட்ராய் அறிந்தவர். இவர் தற்போது ஆஃப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் ஜானதன் ட்ராடின் பங்கும் ஆஃப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இங்கிலாந்து அணியுடனான வெற்றிக்கு பின் ட்ராட் பேசுகையில், ஆஃப்கானிஸ்தான் அணியின் இந்த வெற்றி உலகக்கோப்பை தொடரில் மட்டுமல்லாமல், அடுத்தடுத்து விளையாடும் தொடர்களிலும் எதிரொலிக்கும். இந்த வெற்றியை வீரர்கள் நிச்சயம் கொண்டாட வேண்டும். அனைத்து ஆஃப்கான் வீரர்களுக்கும் அதற்கான சுதந்திரத்தை வழங்க போகிறேன். சென்னை போவதற்ல்கு முன் அனைத்து வீரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

இங்கிலாந்து அணி மட்டுமல்லாமல் எந்த அணியையும் ஆஃப்கானிஸ்தான் அணியால் வீழ்த்த முடியும். அவர்கள் அந்த அளவிற்கு பயிற்சியையும், முயற்சியையும் செய்கிறார்கள். அவர்களுக்கு பயிற்சிக்கு கிடைத்த பலன் தான் இந்த வெற்றி. இந்த வெற்றியை தொடர்ந்து பெறுவதற்கு கூடுதலாக நாங்கள் செயல்பட வேண்டும். அதேபோல் ஆஃப்கான் வீரர்கள் வெறும் வெற்றிக்காக மட்டும் கிரிக்கெட்டை விளையாடவில்லை.

சொந்த நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடரால் மிகவும் சோர்ந்து போயுள்ள மக்களுக்கு சிறிது மகிழ்ச்சியை கொடுப்பதற்காக விளையாடுகிறார்கள். ஆஃப்கானிஸ்தானில் உள்ள குழந்தைகள் ஒவ்வொரின் கைகளிலும் பேட்டையும், பந்தையும் எடுத்து அனைத்து பகுதிகளிலும் விளையாட வேண்டும் என்ற லட்சியத்துடன் விளையாடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

Story first published: Monday, October 16, 2023, 12:10 [IST]
Other articles published on Oct 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+