IPL - கெயில் சாதனையை சமன் செய்த பட்லர்.. பவர்பிளேவில் ஆர்ஆர் அணி புதிய சாதனை.. விவரம்
ஐதராபாத் : ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதிய ரெக்கார்ட் ஒன்றை படைத்துள்ளது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, கடந்த சீசனில் எப்படி அதிரடியாக விளையாடினார்களோ, அதனை இந்த சீசனிலும் தொடர்ந்தார்கள்.
EA கிரிக்கெட் ஸ்போர்ட்ஸ் வீடியோ கேமில் எப்படி எளிதாக சிக்சர், பவுண்டரி அடிக்க முடியுமோ, அதை போல் ராஜஸ்தான் வீரர்கள் ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் அதிரடியாக விளையாடி ரன்களை கடந்தனர். இதனால் ஆட்டத்தின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

பட்லர், ஜெய்ஸ்வாலை கட்டுப்படுத்த ஐதராபாத் எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இதில் ராஜஸ்தான் 22 பந்தில் 50 ரன்கள் எடுத்தது. 22 பந்துகளை எதிர்கொண்ட பட்லர் 54 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி பவர்பிளேவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.
இதன் மூலம் பவர்பிளேவில் அதிக ஸ்கோர் அடித்த அணி பட்டியலில் ராஜஸ்தான் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதல் இடத்தில் கேகேஆர் 105 ரன்களும், சிஎஸ்கே 100 ரன்களும், பஞ்சாப் 86 ரன்களும் அடித்துள்ளது. இது ராஜஸ்தான் அணியின் தனிப்பட்ட அதிகபட்ச பவர்பிளே ஸ்கோராகும்.
இதே போன்று பவர்பிளேவிற்குள் அதிக அரைசதம் அடித்த வீரர் பட்டியலில் கெயில் சாதனையை ஜாஸ் பட்லர் முறியடித்தார். இருவரும் தலா 3 முறை பவர்பிளவில் அரைசதம் அடித்து இருக்கிறார்கள். முதல் இடத்தில் வார்னர் 6 முறை அரைசதம் அடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications