For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இருந்து ஜேபி டுமினி திடீர் விலகல்

ஐ.பி.எல் சீசன் 10 வது தொடரில் இருந்து விலகுவதாக பேபி டுமினி அறிவித்துள்ளார்.

By Karthikeyan

டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் சீசன் 10வது தொடரில், டெல்லி அணியின் சார்பாக பங்கேற்க இருந்த தென் ஆப்ரிக்க வீரர் ஜேபி டுமினி, இந்த சீசன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடரின் 10-வது சீசன் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது.

JP Duminy withdraws from the upcoming IPL

இந்த தொடருக்கான டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் தென்ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து ஆல்ரவுண்டரான டுமினி இடம்பிடித்திருந்தார். இவர் நியூசிலாந்து மண்ணில் நடைபெற்று வரும் இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் ஐ.பி.எல். சீசன் 10-ல் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எனது தனிப்பட்ட காரணங்களுக்காக விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் வருங்காலத்தில் மீண்டும் டெல்லி அணியில் இடம்பிடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு டெல்லி அணியில் இடம் பெற்ற டுமினி திடீரென விலகியுள்ளதால் அந்த அணி நிர்வாகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

ஐ.பி.எல். தொடரில் டுமினி சன்ரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2016-ல் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், தற்போது வரை அந்த அணியிலேயே நீடித்து வந்த நிலையில், விலகுவதாக அறிவித்துள்ளது அந்த அணி நிர்வாகம் அதிரச்சியடைந்துள்ளது.

Story first published: Tuesday, March 21, 2017, 2:41 [IST]
Other articles published on Mar 21, 2017
English summary
Delhi Daredevils all-rounder Jean-Paul Duminy withdraws from the upcoming edition of IPL due to personal reasons.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+