Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தம்பிகளா "லேட்"டா வந்தா 50 டாலர் "தண்டம்".. கும்ப்ளே அதிரடி!

பெங்களூரு: எனக்கு டிசிப்ளின்தான் முக்கியம்... இது தமிழன் படத்தில் டெல்லி கணேஷ் அடிக்கடி பேசும் வசனம். இப்போது அனில் கும்ப்ளேவும் அப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறாராம் இந்திய அணி வீரர்களிடம். பயிற்சிக்கோ, டீம் மீட்டிங்குக்கோ லேட்டாக வந்தால் 50 டாலர் அபராதம் விதிக்கிறாராம் கும்ப்ளே.

தான் விளையாடிய காலத்திலேயே ஒழுங்கை கடைப்பிடித்து வந்தவர் கும்ப்ளே. இப்போது மேலும் ஒரு படி மேலே போய் தன்னைப் போலவே தனது வீரர்களையும் ஒழுங்குடன் கூடியவர்களாக மாற்ற முயற்சித்து வருகிறார் கும்ப்ளே.

தனது வீரர்களுக்கு சில கட்டுத்திட்டங்களை வகுத்துள்ளாராம் கும்ப்ளே. அனைவரும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறாராம்.

மேற்கு இந்தியத் தீவுகளில்

மேற்கு இந்தியத் தீவுகளில்

தற்போது கும்ப்ளே தலைமையிலான இந்திய அணிக் குழு மேற்கு இந்தியத் தீவுகளில் முகாமிட்டுள்ளது. 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது. கோஹ்லி தலைமையில் இந்தத் தொடரை சந்திக்கிறது இந்தியா.

வீரர்களுக்கு ரூல்ஸ்

வீரர்களுக்கு ரூல்ஸ்

இந்திய வீரர்களுக்கு கும்ப்ளே சில விதிகளை வகுத்துள்ளாராம். அதை அவர்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளாராம்.

லேட்டா வந்தால் அபராதம்

லேட்டா வந்தால் அபராதம்

அதன்படி அணி பஸ்ஸில் ஏறுவதற்கோ அல்லது பயிற்சிக்கோ லேட்டாக வந்தால் 50 டாலர் அபராதம் செலுத்த வேண்டுமாம். அதேபோல ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் 4வது நாளில் டீம் மீட்டிங் நடக்குமாம். அதில் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுமாம்.

எப்போது வேண்டுமானாலும் பேசலாம்

எப்போது வேண்டுமானாலும் பேசலாம்

இதுதவிர எப்போது வேண்டுமானாலும் தன்னை வீரர்கள் அணுகி ஆலோசனை பெறலாம் என்றும் கும்ப்ளே வீரர்களுக்குத் தெரிவித்துள்ளாராம்.

நல்ல விஷயம்தானே!

Story first published: Wednesday, July 13, 2016, 13:08 [IST]
Other articles published on Jul 13, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+