பயிற்சி போட்டிகள்
ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டம், சச்சினை போன்றே இருக்கிறது என்று வார்த்தைகளை அவர் உதிர்த்திருக்கிறார். அவர் மேலும் கூறி இருப்பதாவது: உலக கோப்பை தொடருக்கு முந்தைய, நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 பயிற்சி போட்டிகளை நான் உன்னிப்பாக கவனித்தேன்.
சந்தோஷம்
அந்த போட்டிகளில் ஸ்மித்தின் பேட்டிங் என்னை வியப்படைய வைத்தது. ஓராண்டு தடைக்கு பின்னர் அணிக்கு திரும்பியிருக்கும் ஸ்மித் தற்போது பார்முக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி. மேலும், இந்த உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரராக திகழ்வார்.
சச்சின் தான் அவர்
மேலும், தற்போது முதிர்ச்சி அடைந்துள்ள ஸ்மித்தின் பேட்டிங், மாஸ்டர் பிளாஸ்டர் லெஜன்ட் சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்துகிறது. சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங் நுணுக்கங்கள் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும்.
தடை விதிக்கப்பட்டது
அது போன்றே தற்போது ஸ்மித் அபாரமாக ஆடி வருகிறார். அவரது இந்த ஆட்டம் உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலும் பிரதிபலிக்கும் என்று கூறினார். ஆட்டத்தின் போது பந்தை சேதப்படுத்திய எழுந்த குற்றச்சாட்டின் ஓராண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டவர் தான் இந்த ஸ்மித். அந்த தடை அண்மையில் தான் முடிந்து ஐபிஎல் தொடரிலும் பங்கேற்றார்.