டாஸ் வென்றாலே தோல்வி தான்.. யார் சிறந்த அணி, மோசமான அணி சொல்ல தெரியல.. முன்னாள் பயிற்சியாளர் கருத்து
மும்பை : பார்டர் கவாஸ்கர் தொடரில் இதுவரை நடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் டாஸ் வென்ற அணிகளே தோல்வியை தழுவி இருக்கிறது.இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.
இதனால் இம்முறை ஆஸ்திரேலிய அணி தோற்றுவிடுமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த தொடரில் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் யார் மோசமாக விளையாடுகிறார்கள் என்று சொல்லவே முடியவில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

விவாதங்கள்
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு வித்தியாசமான சூழல் நிலவி வருகிறது. ஒன்று இந்தியாவில் அமைக்கப்படும் ஆடுகளம் குறித்து நிறைய விவாதங்கள் எழுந்துள்ளது. மற்றொன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இரண்டு மற்றும் மூன்று நாட்களில் முடிவடைந்து விடுகிறது. இது மிகவும் அபாயகரமான சூழலாக கருதுகிறேன்.

முதல் நாளிலேயே இப்படியா
இன்னொரு கவனிக்கத் தகுந்த விஷயம் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அணிகள் அனைத்தும் இந்த தொடரில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் ஆடுகளங்கள் முதல் நாளிலேயே சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதையே இது காட்டுகிறது. முன் எப்போதும் பந்தின் பவுன்ஸ் கணிக்கும் வகையில் இருக்கும். தற்போது அப்படி இல்லை.

சொல்ல முடியவில்லை
இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளங்கள் சுழற்பந்தவீச்சுக்கு முற்றிலும் சாதகமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த தொடரில் யார் நன்றாக விளையாடுகிறார்கள் யார் மோசமாக விளையாடுகிறார் என்று சொல்லவே முடியவில்லை. ஆடுகளத்தை கணிக்கவே முடியவில்லை. இதேபோன்று ஆஸ்திரேலிய அணி ஏகாரை அணியில் சேர்க்காமல் அனுப்பி இருப்பது நிச்சயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது .

ஜஸ்டின் லாங்கர் கேள்வி
சிட்னியில் கடைசியாக அவர் விளையாடிய போது ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தது. இதன் மூலம் அவர் நிறைய விமர்சனங்களை பெற்றார். இதனால் இந்திய ஆடுகளத்தில் சிறப்பாக செயல்படுவதற்காக ஏகார் பந்துவீச்சு பயிற்சியாளர் டேனியல் விக்டோரியுடன் இணைந்து தீவிர பயிற்சி மேற்கொண்டார். நிச்சயம் ஏகார்க்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என்று ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications