இந்திய அணிக்கு ஷாக் செய்தி.. ஆஸி. டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்ட கே.எல் ராகுல்.. என்ன நடந்தது?
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீதம் இருக்கும் போட்டிகளில் இருந்து கே. எல் ராகுல் நீக்கப்பட்டு உள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இந்த நிலையில் வரும் 7ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.
இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இதற்கான வலைப்பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

எப்படி
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவர் அணிக்குள் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஹனுமா விஹாரிக்கு பதில் கே. எல் ராகுல் அணிக்குள் வருவார் என்று கூறப்பட்டது.

ஆனால்
ஆனால் கே. எல் ராகுல் கடந்த சனிக்கிழமை வலைப்பயிற்சியின் போது காயம் அடைந்தார். கையில் வேகமாக பந்து பட்டதில், இவருக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதில் மணிக்கட்டில் வீக்கம் ஏற்பட்டது.

முடியவில்லை
இந்த காயம் விரைவில் ஆறிவிடும். இந்திய அணியில் இவர் இணைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவருக்கு கையில் ஏற்பட்ட வீக்கம் குறையவில்லை. காயமும் சரியாகவில்லை. இதனால் இவர் தற்போது ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீக்கம்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீதம் இருக்கும் போட்டிகளில் இருந்து கே. எல் ராகுல் நீக்கப்பட்டு உள்ளார். இன்னும் 3 வாரங்கள் இவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இவர் பெங்களூர் சென்று மூன்று வாரங்களுக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கோள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications