Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அகமதாபாத் டெஸ்ட் - இந்திய அணிக்கு இன்னும் வெற்றி வாய்ப்பு இருக்கு.. ஸ்ரீகாந்த் கொடுத்த ஐடியா

அகமதாபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து தங்களது முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 289 ரன்கள் எடுத்தது.

கைவசம் இந்தியாவுக்கு இன்னும் 7 விக்கெடுகள் உள்ளது. இந்திய அணி 191 ரன்கள் ஆஸ்திரேலியாவை விட பின்தங்கி இருக்கிறார்கள்.

கில்லின் ரசிகன்

கில்லின் ரசிகன்

இதனால் இந்த போட்டி சமனில் முடியவே அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்புகின்றனர். எனினும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் நான் சுப்மன் கில்லின் ரசிகனாக மெல்ல மெல்ல மாறி வருகிறேன். இன்று அவருடைய ஆட்டம் பிரமிக்கும் வகையில் இருந்தது. விக்கெட்டை கொடுக்காமல் அவர் நின்று நிதானமாக ரன்களை சேர்த்தார்.

இந்தியாவுக்கு வாய்ப்பு

இந்தியாவுக்கு வாய்ப்பு

இன்று இந்திய அணி மெதுவாக விளையாடி இருந்தாலும், அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருக்கிறது. நாளை ஆட்டத்தில் ஜடேஜா மற்றும் விராட் கோலி பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்றை அமைக்க வேண்டும். இதன் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர்பட்டேல் போன்று அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க வேண்டும். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 650 ரன்கள் தொட்டுவிட்டால் அதன் பிறகு ஆஸ்திரேலிய அணி 150 ரன்கள் பின்தங்கி இருக்கும்.

கடைசி நாள்

கடைசி நாள்

இதனால் ஆஸ்திரேலியாவை கடைசி நாளில் பேட்டிங் செய்ய வைத்து 10 விக்கெட்டுகளையும் இந்தியா வீழ்த்த வேண்டும்.இதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். அகமதாபாத் டெஸ்டில் ஒன்று இந்தியா வெற்றி பெறும், இல்லையெனில் ஆட்டம் டிராவாகும். இது தவிர ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்பே கிடையாது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் லயான் மற்றும் முர்ஃபியை அடிக்க வைத்தது கொஞ்சம் பிரச்சனையாக மாறிவிட்டது. அவர்களை விரைவில் வீழ்த்தி இருந்தால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்க கூடும்.

இந்தியா செய்ய வேண்டியது

இந்தியா செய்ய வேண்டியது

ஆடுகளத்தில் பந்து இப்போதுதான் கொஞ்சம் திரும்ப தொடங்கி உள்ளது. எனினும் அபாயகரமான அளவில் இன்னும் ஆடுகளம் செயல்படவில்லை. இதனால் இந்திய வீரர்கள் நாளை அதிக ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதன் பிறகு கடைசி இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி ஐந்தாம் நாள் ஆடுகளத்தில் விளையாடுவது கடும் சவாலாக இருக்கும் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, March 11, 2023, 20:38 [IST]
Other articles published on Mar 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+