Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தவான் சதத்தால் 3–வது ஒருநாள் போட்டியை வென்றது இந்தியா -தொடரையும் கைப்பற்றியது

கான்பூர்: கடைசி ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இந்திய அணி ஷிகர் தவான் போட்ட சிறப்பான சதத்தால் போட்டியையும், கூடவே தொடரையும் வென்றது.

மேற்கிந்திய தீவுகள்- இந்திய அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் கொச்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டது.

Shikhar Dhawan Yuvraj Singh

இந்த இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இன்று காலை தொடங்கியது. தொடக்கம் முதலே மேற்கிந்திய தீவுகள் அணி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

அந்த அணியின் பொவெல், சாமுவேல்ஸ், பிராவோ ஆகியோர் கணிசமான ரன்களைக் குவித்தனர். பொவெல், சாமுவேல்ஸ் ஆகியோர் 70 மற்றும் 71 ரன்களை குவித்தனர். 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை எடுத்தது மேற்கிந்திய தீவுகள் அணி.

இந்திய அணியின் அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜா, புவனேஸ்வர் குமார், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 264 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் தவானும் களமிறங்கினர்.

Shikhar Dhawan Yuvraj Singh

ரோஹித் சர்மா 4 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் தவானுடன் விராத் கோஹ்லி களமிறங்கினார். ஆனால் கோஹ்லியும் 19 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் தவான்- யுவராஜ் சிங் ஜோடி நிலைத்து ஆடி ரன்களைக் குவித்தது.

தவான், 74 பந்துகளில் சதத்தைக் கடந்தார். யுவராஜ்சிங் 55 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 266 ரன்களை 46.1 ஓவர்களிலேயே எடுத்து இந்தியா வெற்றி பெற்றது.

சிறப்பாக சதம் போட்ட தவான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Story first published: Wednesday, November 27, 2013, 17:06 [IST]
Other articles published on Nov 27, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+