
ரோகித்தின் பரிதாபம்
இந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா, கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் என பல வீரர்களின் ஃபார்ம் கவலையளிக்கும் விதமாக இருந்தாலும், கேப்டன் ரோகித்தின் ஃபார்ம் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடைசியாக விளையாடிய ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதத்தை கூட அடிக்கவில்லை. 14 இன்னிங்ஸ்களில் 248 ரன்களை மட்டுமே அடித்தார். அவரின் கேப்டன்சியும் பெரியளவில் சாதகமாக அமையவில்லை.

கபில் தேவ் பேச்சு
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்காக ரோகித்திற்கு கபில் தேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ரோகித் சர்மா ஒரு சிறந்த வீரர் தான். ஆனால் 14 போட்டிகளில் ஆடியும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்றால் கேள்விகள் எழத்தான் செய்யும். கோலி, டான் பிராட்மேன், சச்சின், கவாஸ்கர் என எப்படிபட்ட வீரராக கூட இருக்கலாம். ஆனால் சரியாக ஆடவில்லை என்றால் கேள்வி வரத்தான் செய்யும்.

சரமாரி கேள்விகள்
ரோகித் மட்டுமே இதற்கு பதில் தர வேண்டும். அவர் போட்டியை ரசித்து விளையாடுவதை நிறுத்திவிட்டாரா?? இவர் போன்ற வீரர்கள் கிரிக்கெட்டை நேசித்து ஆட வேண்டும். சம்பாதித்து வைத்துள்ள பெயர், புகழை வைத்து நீண்ட காலம் கடத்த முடியாது. 14 போட்டிகளில் விளையாடிய பிறகும், இன்னும் எத்தனை வாய்ப்புகளை எதிர்பார்க்கிறீர்கள்??.. அவர்களுக்கு ஏன் பிசிசிஐ ஓய்வு கொடுத்தது என்றே தெரியவில்லை. ஃபார்ம் அவுட் என்றால் அதிக வாய்ப்புகள் தான் கொடுக்க வேண்டும் என கபில் தேவ் ஆதங்கப்பட்டுள்ளார்.

முந்தைய ஃபார்ம்
இங்கிலாந்துக்கு எதிராக கடந்தாண்டு நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா 368 ரன்களை குவித்திருந்தார். இதில் 2 அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்தை விளாசியிருந்தார். இதே ஃபார்மை மீண்டும் அவர் கொண்டு வர வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications