Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"தல".. இனியும் ஆடக் கூடாது.. போதும்.. மத்தவங்களுக்கு வழி விடுங்க.. கபில்தேவே சொல்லிட்டாரே!

நொய்டா : ஐபிஎல் தொடர் என்பது அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அணியில் பங்கேற்று ஆடவுள்ள இளம்வீரர்களுக்கானது என்றும், ஏற்கனவே அணியில் பல சாதனைகளை புரிந்துள்ள தோனி, ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடாது என்றும் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை உள்ளிட்ட பல போட்டிகளில் மகேந்திர சிங் தோனி பங்கேற்று விளையாட வேண்டும் என்றும் கபில்தேவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

தோனி தன்னுடைய இறுதி கட்டத்தில் உள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு ரசிகனாக அவருடைய பல போட்டிகளை காண தான் ஆவலுடன் உள்ளதாகவும் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் பங்கேற்பு

ஐபிஎல் தொடரில் பங்கேற்பு

ஐபிஎல் 2020 சீசன் வரும் மார்ச் 29ம் தேதி துவங்கவுள்ள நிலையில், இதில் சிஎஸ்கே கேப்டனாக தோனி பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும், ராஞ்சியில் உள்ள மைதானத்தில் தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டுவரும் தோனி, வரும் 2ம் தேதி முதல் சென்னை சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் தொடருக்கான தனது பயிற்சியை மேற்கொள்ள உள்ளார். அவரது ஆட்டத்தை பார்க்க அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ரசிகர்கள் காத்திருப்பு

ரசிகர்கள் காத்திருப்பு

ஐபிஎல் 2020 சீசன் வரும் மார்ச் 29ம் தேதி துவங்கவுள்ள நிலையில், இதில் சிஎஸ்கே கேப்டனாக தோனி பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும், ராஞ்சியில் உள்ள மைதானத்தில் தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டுவரும் தோனி, வரும் 2ம் தேதி முதல் சென்னை சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் தொடருக்கான தனது பயிற்சியை மேற்கொள்ள உள்ளார். அவரது ஆட்டத்தை பார்க்க அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

முன்னாள் கேப்டன் அறிவுறுத்தல்

முன்னாள் கேப்டன் அறிவுறுத்தல்

இதனிடையே எம்எஸ் தோனி ஐபிஎல் போட்டிகளில் விளையாடக் கூடாது என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய அணியில் பங்கேற்று ஆடுபவர்களுக்கான நுழைவு வாயிலாக ஐபிஎல் தொடர் உள்ள நிலையில், ஏற்கனவே அணியில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள தோனி, இதில் விளையாடக் கூடாது என்று கபில்தேவ் குறிப்பிட்டுள்ளார்.

கபில்தேவ் கருத்து

கபில்தேவ் கருத்து

தன்னுடைய இறுதி காலகட்டத்தில் தோனி இருப்பதாக தெரிவித்துள்ள கபில்தேவ், ஒரு ரசிகனாக அவரது தொடர் போட்டிகளை காண ஆவலாக இருந்தாலும் அவர் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தோனி விளையாட கபில் அறிவுரை

தோனி விளையாட கபில் அறிவுரை

தோனியின் ரசிகனாக அவர் அணியில் பங்கேற்று அதிகமான போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும், இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பையில் அவர் விளையாட வேண்டும் என்றும் கபில் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள தோனி ஒருவருடம் அணியில் பங்கேற்க முடியாத நிலையில், இது சாத்தியப்படுமா என்பதை அணியின் நிர்வாகமே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பும்ரா குறித்து விளக்கம்

பும்ரா குறித்து விளக்கம்

காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் இருந்து விலகியிருந்த ஜஸ்பிரீத் பும்ரா, நியூசிலாந்திற்கு எதிரான கடந்த சர்வதேச ஒருநாள் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தாதது குறித்து பேசியுள்ள கபில்தேவ், காயத்தின் பாதிப்பிலிருந்து விடுபட்டு மீண்டும் பார்மிற்கு வர சில போட்டிகள் தேவைப்படும் என்று கூறியுள்ளார்.

கபில்தேவ் காட்டம்

கபில்தேவ் காட்டம்

இதனிடையே, நல்ல பார்மில் உள்ள கே.எல்.ராகுலை இந்த டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கியது குறித்தும் கபில்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அணி நிர்வாகமே பதிலளிக்க வேண்டும் என்றும், தங்களுடைய காலகட்டத்தில் நல்ல பார்மில் உள்ள வீரரை போட்டிகளில் இருந்து விலக்கி வைக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கபில்தேவ் கேள்வி

கபில்தேவ் கேள்வி

நியூசிலாந்து அணி போட்ட ஷார்ட் பந்துகளே கடந்த டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது குறித்தும் கபில்தேவ் பேசியுள்ளார். இதற்கு முன்பு பெர்த், மெல்போர்ன் மற்றும் தர்பன் ஆகிய இடங்களில் போடப்பட்ட பவுன்ஸ் பந்துகளை நாம் எதிர்கொள்ளவில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிசிசிஐக்கு கபில்தேவ் நன்றி

பிசிசிஐக்கு கபில்தேவ் நன்றி

மகளிர் கிரிக்கெட்டில் பங்கேற்று வீராங்கனைகள் சிறப்பாக ஆடிவருவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள கபில்தேவ், தற்போது மகளிர் கிரிக்கெட்டை ரசிகர்கள் பார்க்க துவங்கியுள்ளதை சுட்டிக்காட்டி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலை இல்லை என்று கூறியுள்ளார். மேலும் ஆர்வமுள்ள மகளிருக்கு சிறப்பான வழிகாட்டும் பிசிசிஐக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, February 28, 2020, 12:35 [IST]
Other articles published on Feb 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+