Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 வெற்றி பெற்றாலும் இந்திய அணியில் ஓட்டை இருக்கு.. கபில்தேவ் கொடுத்த எச்சரிக்கை.. சரியான கணிப்பு

மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இரண்டு குறை இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

நடப்பு டி20 உலக கோப்பையில் இந்திய அணி நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது.

இந்த இரண்டு ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றாலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது என்று கபில்தேவ் கூறி இருக்கிறார்.

கூடுதலாக ரன் அடியுங்கள்

கூடுதலாக ரன் அடியுங்கள்

இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவின் பந்துவீச்சு மெருகேறி வருகிறது. பேட்டிங்கில் நாம் கூடுதலாக ரன் அடிக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் கடைசி பத்து ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் அடித்து சமாளித்து விடுகிறார்கள். ஆஸ்திரேலியாலில் மைதானங்கள் அனைத்தும் பெரியது. இதனால் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் .

குறைகள் இருக்கிறது

குறைகள் இருக்கிறது

ஆனால் நான் இன்னும் கூறுகிறேன், இந்திய அணியின் பந்துவீச்சு ஆங்காங்கே குறைகள் இருக்கிறது. நெதர்லாந்து போன்ற அணிக்கு எதிராக கூட நாம் சரியான திட்டமிடாமல் பந்துவீசினோம். அது போன்ற ஆட்டத்தை நீங்கள் ஒரு பயிற்சியாக நினைக்க வேண்டும். அதற்காக வெற்றி நான் முக்கியம் இல்லை என சொல்லவில்லை.அந்த ஆட்டங்களில் நீங்கள் நோபாலோ, wide வீசக்கூடாது.

மிகவும் முக்கியமாகும்

மிகவும் முக்கியமாகும்

பந்து வீச்சு நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஆனால் வெளிப்படையாக சில குறைகள் தெளிவாகத் தெரிகின்றன .சூரியகுமார் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் .அவர் ரன்களை வேகமாக அடிக்கிறார். இதனால் அவரை அதிகமாக புகழ வேண்டும். இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமாகும்.

வெற்றிகரமாக எட்டுவார்கள்

வெற்றிகரமாக எட்டுவார்கள்

அதேபோன்று ராகுலும் முக்கிய போட்டிகளுக்கு முன்பு ரன்களை அடிக்க வேண்டும்.விராட் கோலியை பொருத்தவரை அவர் 20 ஓவரும் நின்று விளையாட வேண்டும். ஏனெனில் அவர் எப்போது வேண்டுமானாலும் வேகமாக அடித்து ரன் குவிக்கலாம். இந்திய அணி சேஸிங்கில் எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் அதனை வெற்றிகரமாக எட்டுவார்கள்.

பாராட்டு

பாராட்டு

ஒரு, இரு ஆண்டுகளுக்கு முன்பு நமக்கு பேட்டிங் வரிசையில் நான்காவது வீரர் யார் என்று நாம் தேடிக் கொண்டிருந்தோம்.அந்த இடத்திற்கு நிறைய வீரர்கள் இருந்தார்கள். எனினும் யாரும் சரியாக பொருந்தவில்லை. தற்போது சூரியகுமார் அந்த இடத்தை பிடித்து விட்டார் என்று கபில்தேவ் கூறினார். நிழலில் இந்திய அணி தனது அடுத்த போட்டியில் ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்காவை பெர்த்து நகரில் எதிர்கொள்கிறது இதற்காக இந்திய அணி எடுத்து வந்து அடைந்துள்ளனர்.

Story first published: Friday, October 28, 2022, 15:41 [IST]
Other articles published on Oct 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+