Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: மகாராஷ்டிராவை வீழ்த்தி கர்நாடகா சாம்பியன்

ஹைதராபாத்: ரஞ்சி கோப்பைக்கான இறுதி போட்டியில் மகாராஷ்டிராவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கர்நாடகா சாம்பியன் பட்டம் வென்றது.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் ரஞ்சி கோப்பை இறுதி டெஸ்ட் போட்டி கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இதில் மகாராஷ்டிரா- கர்நாடகம் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி முதல் இன்னிங்கில் 305 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.

515 ரன்கள் குவித்த கர்நாடகா

515 ரன்கள் குவித்த கர்நாடகா

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய கர்நாடகம் 515 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் 210 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை மகாராஷ்டிரா விளையாடியது.

4வது நாள் முடிவில்..

4வது நாள் முடிவில்..

நேற்று 4-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 272 ரன் எடுத்திருந்தது அந்த அணி. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது.

366 ரன்களில் ஆல் அவுட் ஆன மகா.

366 ரன்களில் ஆல் அவுட் ஆன மகா.

இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் 366 ரன்கள் மட்டுமே எடுத்து மகாராஷ்டிரா ஆட்டம் இழந்தது. அந்த அணியின் ஜாதவ் சதம் அடித்தார்.

வெற்றி இலக்கு 157

வெற்றி இலக்கு 157

பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா ஆடியது.

எளிதான சேஸிங்

எளிதான சேஸிங்

3 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகா அபார வெற்றி பெற்றது.

7 முறை பட்டம்..

7 முறை பட்டம்..

இதுவரை 13 ரஞ்சி போட்டிகளில் விளையாடிய கர்நாடகா 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

Story first published: Sunday, February 2, 2014, 16:18 [IST]
Other articles published on Feb 2, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+