For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே அணியையே காலி செய்துவிட்டு.. இப்போ இப்படி செய்தால் என்ன நியாயம்.. ஜாதவ் செய்த காரியம்.. ஷாக்

சென்னை: சையது முஸ்டாக் அலி கோப்பை போட்டியில் மஹாராஷ்டிரா சார்பாக மூத்த வீரர் கேதார் ஜாதவ் ஆடிய விதம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

சையது முஸ்டாக் அலி கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 10ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தம் 22 நாட்கள் இந்த போட்டிகள் நடக்க உள்ளது.

ஜனவரி இறுதிவரை இந்த கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்த போட்டிகள் நடக்கிறது.

 போட்டிகள்

போட்டிகள்

பெங்களூர், கொல்கத்தா, சென்னை, மும்பை, வாதோரா, இந்தூர், அஹமதாபாத் ஆகிய நகரங்களில் இந்த போட்டிகள் நடக்க உள்ளது. ஏற்கனவே பல்வேறு தரப்பு போட்டிகள் குழுக்களுக்கு உள்ளே நடந்துவிட்டது. உலகக் கோப்பை டி 20 தொடர், ஐபிஎல் ஆகியவை இந்த வருடம் நடக்க உள்ளது. இந்த நிலையில் சையது முஸ்டாக் அலி கோப்பை அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 எப்படி

எப்படி

இந்த நிலையில் சையது முஸ்டாக் அலி கோப்பை போட்டியில் மஹாராஷ்டிரா சார்பாக மூத்த வீரர் கேதார் ஜாதவ் ஆடிய விதம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சட்டீஸ்கர் அணி 20 ஓவரில் 192 ரன்கள் எடுத்தது. இந்த வலுவான ஸ்கோரை நோக்கி மஹாராஷ்டிரா அணி களமிறங்கியது.

 மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

ராகுல் திரிப்பாதி தலைமையின் கீழ் மஹாராஷ்டிரா அணி இன்று களமிறங்கியது. இந்த போட்டியில் மஹாராஷ்டிரா வீரர் ரூத்துராஜ் 15 ரன்களுக்கும், ராகுல் 14 ரன்களுக்கும் அவுட் ஆனார்கள். இதனால் மஹாராஷ்டிரா அணி தோல்வி அடைந்துவிடும் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர்.

ஆட்டம் மாறியது

ஆட்டம் மாறியது

ஆனால் மகாராஷ்டிரா வீரர் கேதார் ஜாதவ் களமிறங்கிய பின் மொத்தமாக ஆட்டம் மாறியது. வெறும் 45 பந்துகள் பிடித்த கேதார் ஜாதவ் 85 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். இதில் 5 பவுண்டரி, 5 சிக்சர் அடக்கம். தொடக்கத்தில் இருந்தே ஜாதவ் ஆடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.

 சிறப்பு

சிறப்பு

யாரும் எதிர்பார்க்காத வகையில் தொடக்கத்தில் இருந்து ஜாதவ் அதிரடி காட்டினார். இவரோடு பாட்னர்ஷிப் அமைத்த நவ்சத் ஷேக் 44 பந்தில் 78 ரன்கள் எடுத்தார். இதில் 10 பவுண்டரி, 2 சிக்ஸர் அடக்கம். சிஎஸ்கே அணியில் இருந்த போது கேதார் ஜாதவ் மிகவும் மோசமாக ஆடினார். பல போட்டிகளில் சிஎஸ்கேவின் தோல்விக்கு இவர் காரணமாக இருந்தது.

காரணம்

காரணம்

கடந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி பிளே ஆப் செல்லாமல் வெளியேற ஜாதவ் முக்கிய காரணமாக இருந்தார். டி 20 போட்டிகளில் இவர் டெஸ்ட் ஆட்டம் ஆடியது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. இப்படி இருக்கும் போது தற்போது சையது முஸ்டாக் அலி கோப்பை போட்டியில் ஜாதவ் மாஸ் ஆட்டம் ஆடி உள்ளார். ஐபிஎல்லில் சொதப்பியதற்கான சுவடே இல்லாமல் ஜாதவ் சிறப்பாக ஆடி உள்ளார்.

நீக்கம்

நீக்கம்

சையது முஸ்டாக் அலி கோப்பை போட்டியில் இவர் நன்றாக ஆடும் நிலையில் மீண்டும் ஐபிஎல்லில் கவனம் பெற வாய்ப்புள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி இவர் மீண்டும் எடுக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். இவர் இன்னும் சில நாட்களில் சிஎஸ்கே அணியால் ரிலீஸ் செய்யப்படலாம் என்கிறார்கள்.

Story first published: Tuesday, January 12, 2021, 22:17 [IST]
Other articles published on Jan 12, 2021
English summary
Kedar Jadhav smashes unbeaten 84 in 45 bowls in Syed Mushtag Ali Cup for Maharashtra.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+