Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பல்தான் பாசத்துல உருகிறாதயா ரோகித் சர்மா.. ட்ரெண்டாகும் சஞ்சு சாம்சன்.. ட்விட்டரில் சேட்டன்ஸ் சேட்டை

பிர்ட்ஜ் பவுன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று கேரளா ரசிகர்கள் ட்விட்டரில் அவரின் பெயரை வைத்து ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதில் இந்திய அணியின் அனைத்து இடங்களுக்கும் வீரர்கள் சரியாக நிரம்பியுள்ள நிலையில், விக்கெட் கீப்பர் யார் என்பதே ரசிகர்களின் குழப்பமாக உள்ளது. ஏனென்றால் இந்திய வீரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் இருவருமே அணியில் இருக்கின்றனர்.

Kerala Cricket fans trending Sanju Samson ahead of the First ODI against West Indies

இதில் மிடில் ஆர்டர் வீரர் என்று பார்த்தால், சஞ்சு சாம்சனுக்கே வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஏனென்றால் கடந்த 8 ஆண்டுகளாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதும், வாய்ப்பே கிடைக்காமல் வெளியேற்றப்படுவதுமாக இருக்கும் ஒரே வீரர் சஞ்சு சாம்சன் தான். இந்த 8 ஆண்டுகளில் மொத்தமாக 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.

எத்தனை கேப்டன்கள் மாறினாலும், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மட்டும் வழங்கப்படவே இல்லை. இன்றைய ஆட்டத்திலும் கூட டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக மிடில் ஆர்டரில் களமிறங்கிய இஷான் கிஷன் களமிறக்கப்படவே வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இந்திய அணியில் ஜடேஜா மட்டுமே இடதுகை பேட்ஸ்மேனாக இருக்கிறார்.

Kerala Cricket fans trending Sanju Samson ahead of the First ODI against West Indies

டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லாததால், 4வது இடத்தில் இஷான் கிஷனை களமிறக்க வாய்ப்புள்ளது. இதுவரை மிடில் ஆர்டரிலேயே விளையாடாத இஷான் கிஷனுக்கு முதல் முறையாக இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் ஜனவரி மாதத்திற்கு பின் இந்திய அணிக்கு திரும்பியுள்ள சஞ்சு சாம்சன், ஒருநாள் போட்டியில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில் கேரள ரசிகர்கள் பலரும் நேற்றிரவு முதலே சஞ்சு சாம்சனின் பெயரை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர். மும்பை அணியில் இஷான் கிஷன் இருப்பதால், ரோகித் சர்மா இஷான் கிஷனை தேர்வு செய்யக் கூடாது என்றும், மிடில் ஆர்டரில் களமிறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் ரோகித் சர்மாவின் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

Story first published: Thursday, July 27, 2023, 7:43 [IST]
Other articles published on Jul 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+