Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்ம தல தோனி மேல என்ன பாசம் இந்த சேட்டன்களுக்கு.. 35-அடி கட்-அவுட் வைத்து வரவேற்பு

திருவனந்தபுரம் : கட்-அவுட் வைப்பதெல்லாம் சினிமா நடிகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தான் செய்வார்கள். இதை மாற்றி தல தோனிக்கு கட்-அவுட் வைத்து அசத்தியுள்ளனர் கேரளா ரசிகர்கள்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே நடக்கும் கடைசி ஒருநாள் போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.

அதையொட்டியே இந்த வரவேற்பு கட்-அவுட் வைத்து அசத்தியுள்ளனர் கேரள தோனி ரசிகர்கள்.

தோனிக்கு 35 அடி கட்-அவுட்

அனைத்து கேரளா தோனி ரசிகர்கள் அமைப்பு என்ற பெயரில் உள்ள ரசிகர்கள் தான் இந்த கட்-அவுட் ஏற்பாட்டை செய்துள்ளனர். சுமார் 35-அடி உயரம் கொண்ட இந்த கட்-அவுட்டை வைத்து அதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

தோனி அணியில் நீக்கம்

தோனி அணியில் நீக்கம்

தோனி சமீபத்தில் டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது பேட்டிங் ஒருநாள் போட்டிகளில் மிக மோசமாக இருப்பதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ரசிகர்களின் இந்த வரவேற்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

கேரளாவில் சாதனை

கேரளாவில் சாதனை

தோனி இந்திய அணிக்கு ஆடி 10,000 ரன்களை கடக்க உள்ளார். அவர் இந்த மைல்கல்லை எட்ட இன்னும் ஒரு ரன் மட்டுமே வேண்டும். இந்த நிகழ்வு கேரளாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களை வைத்து அரசியல் கணக்கு

ரசிகர்களை வைத்து அரசியல் கணக்கு

ரசிகர்கள் இப்படி பாசத்தை பொழிவதை கிரிக்கெட் ரசிகர்கள் அன்பு என புரிந்து கொள்வார்கள். ஆனால், தோனிக்கு தென்னிந்தியாவில் பெரும் செல்வாக்கு உள்ளது. அதை வாக்குவங்கியாக மாற்றலாம் என அரசியல் கட்சிகள் திட்டமிடுவது தான் நமக்கு நினைவுக்கு வருகிறது.

[லோக்சபா தேர்தலில் தோனி, கம்பீர்.. தெற்கை வளைக்க தோனி.. ஸ்கெட்ச் போடும் பிஜேபி ]

Story first published: Wednesday, October 31, 2018, 18:52 [IST]
Other articles published on Oct 31, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+