Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை இறுதி போட்டியைவிட ஐபிஎல் இறுதிப்போட்டிதான் பெருசு... கீரன் பொல்லார்ட்

துபாய் : ஐபிஎல் 2020 இறுதிப்போட்டி இன்று மாலை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதையொட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மட்டுமின்றி ரசிகர்களும் சிறப்பாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காட்டிலும் ஐபிஎல் இறுதிப்போட்டியே மிகவும் பெரியது என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் துணை கேப்டன் கீரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெறுகிறது

இன்று நடைபெறுகிறது

ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. கொரோனா பாதிப்பிலும் இந்த தொடர் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.

இன்று அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

இன்று அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு

ரசிகர்கள் இல்லாத குறையும் டிவியில் ஒளிபரப்பப்படும் போட்டிகளின் அதிகமான பார்வையாளர்கள் மூலம் தீர்ந்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டிகளுக்கு லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் இருந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் இந்த பார்வையாளர்கள் மேலும் அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொல்லார்ட் வீடியோ

பொல்லார்ட் வீடியோ

இந்நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டி குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் அணியின் துணை கேப்டன் கீரன் பொல்லார்ட் மற்றும் மகேளா ஜெயவர்த்தனே ஆகியோர் ஐபிஎல் குறித்து பேசியுள்ளனர்.

உலகக்கோப்பை பைனல்சைவிட பெரியது

உலகக்கோப்பை பைனல்சைவிட பெரியது

அந்த வீடியோவில் கீரன் பொல்லார்ட், உலக கோப்பை இறுதிப்போட்டியை காட்டிலும் ஐபிஎல் இறுதிப்போட்டி மிகப்பெரியது என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் இறுதிப்போட்டி என்றாலே நெருக்கடியானது என்றுதான் அர்த்தம். நாம் சறிப்பாக விறைளயாடினாலே வெற்றி நமக்கு அதில் சாத்தியமாகும் என்று அவர் கூறியுள்ளார்.

கொண்டாட வேண்டும்

கொண்டாட வேண்டும்

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்று அந்த போட்டியை என்ஜாய் செய்து விளையாடுவது சிறப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் இல்லாதது அந்தப் போட்டியில் சில மாற்றங்களை கொண்டு வந்தாலும் போட்டியை உற்சாகமாக கொண்டாடுவது முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, November 10, 2020, 17:01 [IST]
Other articles published on Nov 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+