இந்திய முன்னாள் வீரர் குறித்து பொல்லார்ட் சர்ச்சை பதிவு.. சில நிமிடங்களிலேயே நீக்கம்.. என்ன சண்டை!!
மும்பை: இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குறித்து சர்ச்சை பதிவை போட்ட பொல்லார்ட், உடனடியாக நீக்கியுள்ளார்.
ஐபிஎல் 15வது சீசன் போட்டிகள் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் படுமோசமாக சொதப்பியது.
மும்பை அணியில் பல்வேறு வீரர்களும் சொதப்பிய போதும், கெயீரன் பொல்லார்ட் பெரிதும் சறுக்கியுள்ளார்.

பொல்லார்டின் சொதப்பல்
நடப்பு சீசனில் 11 இன்னிங்ஸ்களில் விளையாடிய கெயீரன் பொல்லார்ட் 144 ரன்களை மட்டுமே அடித்தார். நிறைய போட்டிகளில் பொல்லார் 15 ஓவர்களுக்கும் முன்னதாகவே களமிறங்க வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் அதனை பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதன் காரணமாக கடைசி சில போட்டிகளில் பொல்லார்ட்-க்கு மாற்றாக டிம் டேவிட் களமிறக்கப்பட்டு வந்தார்.

சர்ச்சைகரமான பதிவு
இந்நிலையில் அதிருப்தியில் இருந்த கெயீரன் பொல்லார்ட், சர்ச்சைக்குரிய இன்ஸ்டா பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதாவது " இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவை சமூக வலைதளங்களில் பின்பற்றுவோர்களும், அவருக்கான ரசிகர்களும் அதிகரித்திருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து அதனையே செய்யுங்கள் என மறைமுகமாக விமர்சித்திருந்தார். பின்னர் சிறிது நேரத்திலேயே பதிவை நீக்கிவிட்டார்.

என்ன காரணம்
பொல்லார்டின் பதிவுக்கான அர்த்தம் என்னவென்று புரியாமல் இருந்த சூழலில் தற்போது விளக்கம் கிடைத்துள்ளது. ஐபிஎல் தொடரின் போது, பொல்லார்ட்-ஐ ஆகாஷ் சோப்ரா தாக்கி பேசியிருந்தார். அதில், மும்பை அணி பொல்லார்ட்டை ரூ.6 கோடிக்கு தக்கவைத்ததே தவறு. அவரை விட்டிருந்தால் பணம் வேறு ஒருவருக்கு பயன்பட்டிருக்கும். இன்னும் எத்தனை வாய்ப்புகள்தான் சரியாக விளையாடாத பொல்லார்ட்-க்கு தருவார்கள்.

அவரை துரத்திவிடுங்கள்
கெயீரன் பொல்லார்ட்-க்கு டாட்டா காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனி அவரை நீக்கிவிட்டு, டிம் டேவிட்டை முழு நேரமாக பயன்படுத்த வேண்டும். பொல்லார்டின் பேட்டிங்கும் பயன்படவில்லை. அவரின் பவுலிங் திறமையும் பயன்படுத்த முடியாத போது எதற்கு அவர்? எனக்கூறியிருந்தார். இதற்காக தான் ஆகாஷ் சோப்ரா " தன்னை விமர்சித்தே பிரபலமாகியிருக்கலாம் என பொல்லார்ட் மறைமுகமாக பதிவிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications