Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உனக்காக வாழ நினைக்கிறேன்.. மனைவியுடன் செம ஹேப்பி... "ஃபுல் பாசிட்டிவ் எனர்ஜி"யுடன் போலார்ட்!

டிரினிடாட் டொபோகா: உண்மையிலேயே விளையாட்டு வீரர்களின் மனைவிமார்களும், வீராங்கனைகளின் கணவர்மார்களும் கொடுத்து வைத்தவர்கள்தான்.. இந்த ஓய்வு உண்மையிலேயே வீரர், வீராங்கனைகளை விட அவர்களின் குடும்பத்தாருக்குத்தான் நிறைய நன்மைகளைக் கொடுத்துள்ளது.

வழக்கமாக இதுபோன்ற நீளமான பிரேக் எல்லாம் விளையாட்டுத் துறையில் சாத்தியமே இல்லை. அணியில் இடம் பெறாமல் போனால் அல்லது போட்டிகள் நடத்தாமல் போனால்தான் ஓய்வு கிடைக்கும். அப்போதும் கூட அவர்கள் எந்த இடத்தில் இருப்பார்கள் என்று சொல்லவே முடியாது.

பாதிக்கும் மேற்பட்டோர் விளம்பரத்தில் நடிக்கப் போய் விடுவார்கள் அல்லது விழாக்களுக்கு சீப் கெஸ்ட்டாக போய் விடுவார்கள். சிலரே வீட்டோடு இருப்பார்கள்.

அருமையாக கிடைத்த பிரேக்

அருமையாக கிடைத்த பிரேக்

கொரோனாவைரஸ் பாதிப்பால் தற்போது கிடைத்துள்ள பிரேக் உண்மையிலேயே விளையாட்டுத்துறையினரின் குடும்பத்தினருக்கு நிறைய நல்ல விஷயங்களை செய்துள்ளது. ஆமாங்க, வீரர்களும், வீராங்கனைகளும் வீட்டோடு உள்ளனர். எங்குமே போகவில்லை. வீட்டில் ஜாலியாக பொழுதைக் கழிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. வீட்டிலேயே உடற் பயிற்சியும் செய்வதால் மொத்தமாக அவர்கள் குடும்பத்தினருடன் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஜென்னா போலார்ட் மகிழ்ச்சி

ஜென்னா போலார்ட் மகிழ்ச்சி

இப்படி வீரர்களுக்குக் கிடைத்த ஓய்வால் குதுகலமாகியுள்ள குடும்பத்தினர் வரிசையில் ஜென்னாவும் இடம் பெறுகிறார். ஆமா யாரு இந்த ஜென்னான்னு கேக்கறீங்களா.. வேற யாருங்க.. நம்ம கீரன் போலார்டின் மனைவிதான். மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி நாயகன்தான் போலார்ட். இவர் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியிலும் முக்கிய வீரர். இவரது மனைவிதான் ஜென்னா.

ஜென்னா இந்தியப் பெண்

ஜென்னா இந்தியப் பெண்

ஜென்னா இந்திய வம்சாவளிப் பெண்மணி ஆவார். போலார்ட் - ஜென்னா தம்பதிக்கு அழகான 3 குழந்தைகள். சூப்பர் ஹேப்பி குடும்பம். ஆனால் அப்பா போலார்ட் காலில் சக்கரம் மாட்டிக் கொண்டு ஓடுவதால் குடும்பத்தோடு பொழுது கழிப்பது என்பது எப்பவாச்சும்தான் நடக்கும். ஆனால் இப்போது போலார்டுக்கு நிறைய ஓய்வு கிடைத்திருப்பதால் குடும்பமே செம ஹேப்பியாகி விட்டது.

மனைவியுடன் போலார்ட் நீச்சல்

குறிப்பாக ஜென்னா ரொம்ப மகிழ்ச்சியாகியுள்ளார். அதைத்தான் இந்த போட்டோ வெளிப்படுத்துகிறது. கணவர் போலார்டுடன் ஜாலியாக நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்துள்ளார் ஜென்னா. அவரது முகத்தில் பாருங்கள் அத்தனை பூரிப்பு. குடும்பத்துடன் நேரம் செலவிடுவது எல்லா பெண்களுக்கும் சந்தோஷம்தான்.. அதிலும் கணவருடன் இருக்கும் நிமிடங்கள் சொர்க்கமாச்சே.. அந்த பூரிப்பில்தான் இந்த நீச்சல் குளத்தில் காணப்படுகிறார் ஜென்னா.

போலார்ட் மகளும் மனைவியும்

அதேபோல இன்னொரு புகைப்படத்தில் ஜென்னாவும், மகளும் இருக்க அதை அழகாக போட்டோ எடுத்து பகிர்ந்துள்ளார் போலார்ட். இருவரும் ஹோட்டலில் அமர்ந்துள்ளனர். குடும்பத்தோடு கூட்டிக் கொண்டு போயுள்ளார் போல. பார்க்கவே அழகாக அம்சமாக இருக்கிறது. அப்பா போட்டோ எடுப்பதை பல்வரிசை தெரிய சந்தோஷத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிறாள் மகள்.. ஜென்னாவுக்கு கணவர் குறித்தான பெருமை. இப்படித்தாங்க ஜாலியாக பொழுது போகிறது பல விளையாட்டுக் குடும்பங்களில்.. கொரோனாவால் நடந்த நல்ல விஷயங்கள் இவைதான்.

Story first published: Sunday, March 22, 2020, 14:46 [IST]
Other articles published on Mar 22, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+