Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொளேர் பொல்லார்டின் அதிரடி.. 500 டி20 போட்டிகள்.. 10,000 ரன்கள்.. வேறென்ன வேறென்ன வேண்டும்!

கண்டி : இலங்கைக்கு எதிராக கண்டியில் நடைபெற்ற சர்வதேச டி20 தொடரின் முதல் போட்டியில் மோதிய மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்டு, இருவேறு சாதனைகளை புரிந்துள்ளார்.

Recommended Video

Pollard becomes first player to play 500 T20 matches| டி20 போட்டிகளில் சாதனை நிகழ்த்திய பொல்லார்ட்

இந்த போட்டியின் மூலம் சர்வதேச டி20யில் தனது 500வது போட்டியில் விளையாடிய பொல்லார்டு, 10,000 ரன்களை பூர்த்தி செய்து 10,000 ரன்கள் கிளப்பில் இணைந்துள்ளார்.

முன்னதாக டி20 போட்டிகளில் 13,296 ரன்களை மேற்கிந்திய தீவுகளின் வீரர் கிறிஸ் கெயில் அடித்து சாதனை புரிந்துள்ள நிலையில், தற்போது இரண்டாவது வீரராக பொல்லார்டு இந்த சாதனையை எட்டியுள்ளார்.

ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்டு

ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்டு

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டராக செயல்பட்டு வருபவர் கீரன் பொல்லார்டு. இவர் குறைந்த ஓவர்கள் அணியின் கேப்டனாகவும் உள்ளார். தனது அணியின் மிடில் ஆர்டரில் விளையாடும் பேட்ஸ்மேனாகவும், மீடியம் பேஸ் பந்துவீச்சாளராகவும் செயல்பட்டு வருபவர். தனது சிறப்பான ஆட்டங்களின்மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் பொல்லார்டு.

சர்வதேச டி20 போட்டிகள்

சர்வதேச டி20 போட்டிகள்

இதனிடையே இலங்கையில் மேற்கிந்திய தீவுகள் அணி, சர்வதேச டி20 தொடரில் விளையாடி வருகிறது. கண்டியில் நடைபெற்ற முதல் போட்டியில் 25 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கி ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தநிலையில், அடுத்ததாக விளையாடிய இலங்கை அணி 171 ரன்களுக்கு சுருண்டது.

10,000 ரன் கிளப்பில் இணைந்த பொல்லார்டு

10,000 ரன் கிளப்பில் இணைந்த பொல்லார்டு

இந்நிலையில், இந்த போட்டியின்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 500 போட்டிகளை பூர்த்தி செய்த முதல் வீரர் என்ற சாதனையை புரிந்துள்ளார் பொல்லார். மேலும் 10,000 ரன்களை அடித்து பத்தாயிரம் ரன்கள் கிளப்பிலும் அவர் இணைந்துள்ளார். முன்னதாக 9,966 ரன்களுடன் இந்த போட்டியில் மோதிய பொல்லார்டு, 15 பந்துகளில் 34 ரன்களை அடித்து தனது 10,000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார்.

கெய்லை தொடர்ந்த பொல்லார்டு

கெய்லை தொடர்ந்த பொல்லார்டு

13,296 ரன்களை அடித்து கிறிஸ் கெயில் சர்வதேச டி20 போட்டிகளில் 10,000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள நிலையில், தற்போது பொல்லார்டு, அந்த சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை தட்டி சென்றுள்ளார். இதன்மூலம் தன்னுடைய அணி வீரருடன் சாதனையை தொடர்ந்து அவர் பாராட்டு பெற்றுள்ளார்.

10,000 ரன்கள் கிளப்பிற்கு வரவேற்பு

இதனிடையே பொல்லார்டின் இந்த சாதனைக்கு அவரின் முந்தைய சாதனையாளர் கிறிஸ் கெயில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டர் மூலம் தனது வாழ்த்துக்களை பதிவு செய்துள்ள கெயில், 10,000 ரன் கிளப்பிற்கு அவரை வரவேற்றுள்ளார். மேலும் 500 போட்டிகளை பூர்த்தி செய்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, March 5, 2020, 13:10 [IST]
Other articles published on Mar 5, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+