Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸ் அதிரடி வீரர் தான் இனி கேப்டன்..? வெஸ்ட் இண்டீஸ் வியூகம்..! ரசிகர்கள் ஹேப்பி

போர்ட் ஆப் ஸ்பெயின்: தொடர்ந்து சொதப்பி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிரடி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்டார் வீரருமான பொல்லார்டு நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமாக விளையாடி, பெரும் தோல்வியுடன் ஊர் திரும்பிய அணிகளில் வெஸ்ட் இண்டீசும் ஒன்று. இத்தனைக்கும் 2 முறை உலக கோப்பையை வென்றும் பெரிதாக சாதிக்க வில்லை.

இந்திய அணியுடனான ஆட்டத்தின் போதும் இதே கதை தான். ஒன்றும் பெரிதாக சொல்லிக் கொள்ளும் படியாய் வெஸ்ட் இண்டீஸ் ஆடவில்லை. தொடர்ந்து அணியின் செயல்பாடு மோசமாக இருப்பதால், கேப்டனை அதிரடியாக மாற்ற அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

விரிவாக ஆலோசனை

விரிவாக ஆலோசனை

போர்ட் ஆப் ஸ்பெயினில் 2 நாட்கள் வெஸ்ட் இண்டீசின் காலாண்டு கூட்டத்தில், அந்த அணியின் கிரிக்கெட் செயல்பாடுகள், வெற்றி சதவீதம், உலக கோப்பை தோல்வி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

சீரமைக்க கருத்துகள்

சீரமைக்க கருத்துகள்

இந்தியாவுக்கு எதிராக ஒட்டு மொத்தமாக ஒயிட் வாஷ் ஆனது பற்றியும் காரசாரமாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அணியில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்மே காப்பாற்ற முடியும் என்ற கருத்துகளும் முன் வைக்கப்பட்டன.

புதிய கேப்டன்?

புதிய கேப்டன்?

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டரை மாற்ற தேர்வுக்குழு பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக, அதிரடி வீரரும், ஆல் ரவுண்டருமான கெய்ரன் பொல்லார்டை ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கு கேப்டனாக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 வருடங்கள்

3 வருடங்கள்

பொல்லார்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகி விட்டன. 2016ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். 2019 உலக கோப்பையிலும், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் ரிசர்வ் வீரராக இருந்தார்.

ஒத்த கை சிக்ஸ்

ஒத்த கை சிக்ஸ்

இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 101 போட்டிகளில் பங்கேற்று, 2,289 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இருந்த அவர், ஒரு கையில் சிக்சர் அடித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்று. ஒத்த கை சிக்ஸ் என்றால் ரசிகர்களுக்கு ஞாபகம் வரும்.

ஆப்கன் தொடர்

ஆப்கன் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் அணியானது, அடுத்து ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாடுகிறது. அந்த அணிக்கு எதிராக 3 டி-20, 3 ஒருநாள், மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர் வரும் நவம்பர் 5ம் தேதி துவங்கவுள்ளது.

Story first published: Monday, September 9, 2019, 14:51 [IST]
Other articles published on Sep 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+