Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூறாவளியாய் சுழன்றடித்த சூர்யகுமார்... இந்திய அணியில் தேர்வாகாதது குறித்து ஏமாற்றம்... பொல்லார்ட்

அபுதாபி : நேற்றைய ஐபிஎல்லின் 48வது லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி கொண்டுள்ளது.

இந்த போட்டியில் 43 பந்துகளில் 79 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார் சூர்யகுமார் யாதவ்.

இந்நிலையில் வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் கீரன் பொல்லார்ட், இந்திய அணியில் தேர்வாகாதது குறித்து சூர்யகுமார் யாதவ் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

நேற்றைய 48வது ஐபிஎல் லீக் போட்டியில் ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி 164 ரன்களை அடித்த நிலையில் அடுத்ததாக விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக சேஸிங் செய்து 19.1 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ்

முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 43 பந்துகளில் 79 ரன்களை குவித்து அந்த அணியை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் 16 புள்ளிகளை பெற்று ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

கீரன் பொல்லார்ட் பாராட்டு

கீரன் பொல்லார்ட் பாராட்டு

ஆர்சிபி 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கீரன் பொல்லார்ட், அணி சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், சூர்யகுமார் சிறப்பாக விளையாடி வெற்றியை பெற்றுத் தந்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஏமாற்றத்தில் உள்ளார் -பொல்லார்ட்

ஏமாற்றத்தில் உள்ளார் -பொல்லார்ட்

அவர் தொடர்ந்து அணிக்காக சிறப்பாகவும் நிலையாகவும் விளையாடினால் அவருக்கான வெகுமதி கிடைக்கும் என்றும் பொல்லார்ட் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படாததால் அவர் மிகவும் ஏமாற்றத்தில் உள்ளதாகவும் கீரன் பொல்லார்ட் மேலும் கூறினார்.

Story first published: Thursday, October 29, 2020, 11:39 [IST]
Other articles published on Oct 29, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+