விசாகப்பட்டினத்தில் நடக்க இருந்த 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ரத்து
விசாகப்பட்டினம்: இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற இருந்த 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

'ஹூட்ஹூட்' புயல் நேற்று துறைமுக நகரான விசாகப்பட்டினத்தை கடந்த போது பலத்த காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அந்நகர கிரிக்கெட் மைதானத்திற்கும் சேதம் ஏற்பட்டது. இன்றும் அங்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓரிரு நாட்களுக்குள் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற இயலாது என்பதால் இந்த ஆட்டம் கைவிடப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இணைச் செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த தொடர் 4 போட்டி கொண்ட தொடராக மாறியுள்ளது. அடுத்த ஆட்டம் வருகிற 17-ந்தேதி தர்மசாலாவில் நடக்கிறது.
Story first published: Monday, October 13, 2014, 9:04 [IST]
Other articles published on Oct 13, 2014


Click it and Unblock the Notifications