ஐபிஎல் ஓனர்களிலேயே பரம ஏழை ப்ரீத்திதானாம்....!
மும்பை: ஐபிஎல் அணி உரிமையாளர்களியே ஏழ்மையானவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளரான நடிகை ப்ரீத்தி ஜிந்தாதான் ஏழையானவராம்.
வெல்த் எக்ஸ் என்ற இதழ் இதைத் தெரிவித்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முக்கியப் பங்குதாரர் ப்ரீத்திதான்.
ஆனால் எட்டு ஐபிஎல் உரிமையாளர்களின் சொத்துப் பத்துக்களைப் பார்க்கும்போது கொஞ்சமாக வைத்திருப்பவர் ப்ரீத்தி மட்டுமே.

ப்ரீத்தியின் சொத்து 183 கோடிதான்
ப்ரீத்தி ஜிந்தாவின் சொத்து மதிப்பு 30 மில்லியன் டாலர்தான். அதாவது ரூ. 183 கோடியாம்.

அடேங்கப்பா முகேஷ் அம்பானி
மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளன முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்போ ரூ. 1.29 லட்சம் கோடியாகும்.

சன்ரைசர்ஸ் கலாநிதிக்கு 2.2 பில்லியன் டாலர்
2வது இடத்தில் இருப்பவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உரிமையாளரான கலாநிதி மாறன். இவரது சொத்து மதிப்பு ரூ. 13 ஆயிரத்து 340 கோடியே, 80 லட்சமாகும்.

மலை முழுங்கி மல்லையாவுக்கு 3வது இடம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விஜய் மல்லையா 640 மில்லியன் டாலருடன் 3வது இடத்தில் இருக்கிறார். இவர் வங்கிகளுக்குக் கட்ட வேண்டிய கடன் தொகை ரூ. 7000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications